சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் |
இந்தியத் திரையுலகின் பிரம்மாண்டமான படைப்பு என சொல்லப்பட்டு வரும் 2.0 படம் எதிர்ப்பார்ப்புகளை ஈடு செய்யும் அளவில் இருக்கிறதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
300 கோடி ரூபாய் பட்ஜெட் என்று சொல்லி ஆரம்பிக்கப்பட்ட படத்தை இப்போது 550 கோடி ரூபாய் செலவாகியுள்ளது என ரஜினிகாந்த் மூலம் சொல்ல வைத்திருக்கிறார்கள்.
அவ்வளவு செலவு செய்து எடுக்கப்பட்ட படத்தின் டீசர், டிரைலர் இந்தியத் திரையுலகத்தில் பெரிய சாதனையைப் படைக்காமலிருப்பது ரஜினிகாந்த் ரசிகர்களிடம் பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாகுபலி 2 படத்தின் டிரைலர் ஏற்படுத்திய சாதனையைக் கூட 2.0 டிரைலர் ஏற்படுத்தவில்லை. மேலும் அதைவிட செலவு குறைவில் எடுக்கப்பட்ட படங்கள் டீசர், டிரைலரில் பெரிய சாதனையை ஏற்படுத்தி வருகின்றன.
தமிழில் சர்கார் டீசர் ஏற்படுத்திய சாதனையை 2.0 பட டீசர், டிரைலரால் முறியடிக்க முடியவில்லை. 2.0 டிரைலர் வெளியாகியுள்ள இந்த 24 மணி நேரத்தில் தமிழில் 77 லட்சம் பார்வைகளும், தெலுங்கில் 35 லட்சம் பார்வைகளையும், ஹிந்தியில் 1 கோடி பார்வைகளையும் பெற்றுள்ளது.
2.0 டிரைலருக்குப் போட்டியாக ஷாரூக்கான் நடித்துள்ள ஜீரோ டிரைலர் அமைந்துவிட்டது. அந்த டிரைலர் 24 மணி நேரத்தில் 6 கோடி பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது. டிரென்டிங்கிலும் ஜீரோ படத்திற்கு அடுத்தே இரண்டாவது இடத்தில் 2.0 உள்ளது.
ஹிந்தி ஹீரோவான அக்ஷய் குமார் நடித்திருந்தும், இந்தியாவின் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் ரஜினிகாந்த் நடித்திருந்தும் ஷாரூக்கான் படத்திற்குப் பிறகே அவர்களது படங்கள் உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டிரைலருக்கு இவ்வளவுதான் வரவேற்பு என்றால் படத்திற்கு எப்படி இருக்குமோ என்பது படக்குழுவிற்கு யோசனையாக இருக்கும்.