ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பண்டிகை நாட்கள் என்றாலே டிவிக்களில் திரைக்கு வந்து சில மாதங்களே ஆன என புத்தம் புதிய படங்களைப் போடுவது வழக்கம். ஆனால், திரைக்கு வந்து நான்கு வாரங்களே ஆகியுள்ள '96' படத்தை வரும் தீபாவளி அன்று டிவி ஒன்றில் ஒளிபரப்பாக உள்ளதாக அறிவித்துள்ளார்கள்.
அதற்கு அந்தப் படத்தின் நாயகியான த்ரிஷா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். டுவிட்டரில் அவர், “இது 5வது வாரம், 80 சதவீதம் தியேட்டரில் மக்கள் படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இவ்வளவு சீக்கிரம் '96' படத்தை டிவியில் போடுவது நியாயமில்லை. படத்தை பொங்கலுக்குத் தள்ளி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்,” என த்ரிஷா பதிவிட்டுள்ளார்.