ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
அக்கூஸ் புரொடக்சன் சார்பில் பி.டி.சையது முகமது தயாரிக்கும் படம் ராஜாவுக்கு ராஜா. இதில் வி.ஆர்.விநாயக், தியா, வைஷ்ணவி என்ற புதுமுகங்களுடன் மகாநதி சங்கர், மனோபாலா உள்பட பலர் நடிக்கிறார்கள். அங்காடித் தெரு சிந்து வில்லியாக நடிக்கிறார். காசி விஷ்வா ஒளிப்பதிவு செய்கிறார், ஜெயக்குமார் இசை அமைக்கிறார். படம் பற்றி இயக்குனர் ஏ.வசந்த் குமார்கூறியதாவது:
சந்தோஷமோ, வேதனையோ, அனைத்தையும் ஜாலியாக கடந்துப்போகும் அப்பா, மகன் பற்றிய கதை தான் "ராஜாவுக்கு ராஜா". சின்ன சின்ன தவறுகளால் அப்பாவும், மகனும் அடிக்கடி போலீஸிடம் சிக்கி தண்டனை பெறுவார்கள். மகனை போலீஸில் சேர்த்துவிட்ட போலீஸ் நம்மள ஒன்னும் பண்ண மாட்டாங்க என யோசித்து, தன் செல்வாக்கை பயன்படுத்தி விருப்பமில்லாத மகனை போலீஸ் வேலையில் சேர்த்து விடுகிறார். போலீசான பிறகும் தைரியமில்லாத ஹீரோ ஒரு சந்தர்ப்பத்தில் வில்லியிடம் மாட்டிக்கொள்கிறார். அந்த வில்லியிடம் இருந்து எப்படி தப்பிக்கிறார் என்பதை காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து, ஆக்சன் மற்றும் காதல் கலந்து திரைக்கதை தருகிற படம். என்கிறார் வசந்தகுமார்.