'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் |
இந்த ஆண்டின் துவக்கத்தில் பெரும் பரபரப்பபை ஏற்படுத்திய படம் பத்மாவத். எதிரிகளில் கையில் சிக்கி கற்பை இழப்பதை விட தீக்குளித்து சாவதே மேல் என்று 100க்கும் அதிகமான இளம் பெண்களுடன் தீக்குளித்து இறந்த ராஜபுதனத்து இளவரசி பத்மாவதியின் கதை.
இதில் பத்மாவதியாக தீபிகா படுகோனேவும். அவர் மீது ஆசை கொள்ளும் முகலாய மன்னனாக ரன்வீர் சிங்கும், கணவராக சாகித் கபூரும் நடித்திருந்தார்கள். சஞ்சய் லீலா பன்சாலி இயக்கி இருந்தார். இதற்கு ராஜபுதனத்து சமூக மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எதிர்ப்பை மீறி வெளியான படம் பெரும் வெற்றி பெற்றதோடு வசூலையும் குவித்தது.
இந்திப் படமாக இருந்தாலும், தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு பத்மாவதி என்ற பெயரில் வெளியிடப்பட்டு இங்கும் நல்ல வசூலைக் கொடுத்தது. தற்போது இந்தப் படத்தை தீபாவளி சிறப்பு திரைப்படமாக கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி நாளை இரவு 7 மணிக்கு ஒளிபரப்புகிறது. தீபாவளி அன்று மறு ஒளிபரப்பாகும் என்று தெரிகிறது. படத்திற்கு சன்ஷ்த் பட்டாச்சார்யா இசை அமைத்துள்ளார், சுதீப் சட்டர்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார்.