வீர தீர சூரன் - 'டிராப்' ஆன படத்தின் பெயரில் 'விக்ரம் 62' | 'புஷ்பா 2' - ஹிந்தி உரிமை இவ்வளவு விலையா? | ரூ.5 கோடி தாண்டாத தமிழ்ப் படங்கள் : ரூ.50 கோடியைக் கடந்த மலையாளப் படங்கள் | வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி |
விஜய் ஆண்டனி நடித்த திமிரு புடிச்சவன் படம் தீபாவளிக்கு வெளிவருவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் தீபாவளிக்கு வருவதால் பல படங்கள் தங்களின் வெளியீட்டை ஒத்திவைத்தனர்.
சர்கார் படம் அதிக தியேட்டரில் வெளியாகும்போது தங்களுடைய படங்களுக்கு போதிய தியேட்டர்கள் கிடைக்காது என்பதால் படவெளியீட்டை சில வாரங்களுக்கு தள்ளி வைத்தனர்.
இந்நிலையில் விஜய் ஆண்டனி நடித்த திமிரு புடிச்சவன் படத்தை தீபாவளி அன்று வெளியிடுவோம் என்று தைரியமாக அறிவித்தனர். ஆனால் படம் வெளியாகவில்லை நவம்பர் 16-ஆம் தேதி வெளியாகும் என்று சில தினங்களுக்கு முன்பு சொல்லப்பட்டது.
தற்போதைய தகவலின்படி திமிரு புடிச்சவன் படம் இம்மாதம் வெளியாக வாய்ப்பில்லை என்று சொல்லப்படுகிறது. திமிரு புடிச்சவன் தமிழ்நாடு திரையரங்க உரிமையை பெற்ற விநியோகஸ்தருக்கு முந்தைய படம் ஏற்படுத்திய நஷ்டம் தொடர்பான பஞ்சாயத்து இருப்பதால் அதை தீர்க்கும் வரை இப்படம் ரிலீஸில் சிக்கல் நிலவுவதாக கூறப்படுகிறது.