Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஜய் ஆண்டனியின் அக்னிச் சிறகுகள்

02 நவ, 2018 - 10:53 IST
எழுத்தின் அளவு:
Vijay-Antonys-next-movie-titled-as-Agni-Siragugal

முன்னாள் ஜனாதிபதியும், விஞ்ஞானியுமான அப்துல் கலாமின் சுயசரிதை நூலின் தலைப்பு அக்னிச் சிறகுகள். தற்போது இதே தலைப்பில் ஒரு படம் தயாராகிறது. விஜய் ஆண்டனி ஹீரோவாக நடிக்கிறார். அவரது ஜோடியாக ஷாலினி பாண்டே நடிக்கிறார். அருண் விஜய் வில்லனாக நடிக்கிறார். இவர்கள் தவிர பிரகாஷ்ராஜ், ஜெகபதிபாபு, செண்ட்ராயன் உள்பட பலர் நடிக்கிறார்கள்.

தமிழ், தெலுங்கு மொழியில் தயாராகும் இந்தப் படத்தை மூடர் கூடம் படத்தை இயக்கிய நவீன் இயக்குகிறார், அம்மா கிரியேஷன் சார்பில் டி.சிவா தயாரிக்கிறார். நடராஜன் ஷங்கர் இசை அமைக்கிறார். படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை கமல்ஹாசன் நேற்று வெளியிட்டார். படம் பற்றி நவீன் கூறியதாவது:


இது ஒரு திகில் படம். மூடர் கூடத்திற்கு பிறகு நான் எழுதிய சீரியசான ஒரு கதை. இது எந்த ஹீரோவையும் மனதில் வைத்து எழுதிய கதை அல்ல. பொதுவான ஒரு கதை. எழுதி முடித்த பிறகு இந்த கதையில் விஜய் ஆண்டனி நடித்தால் நன்றாக இருக்கும் என்று முடிவு செய்து அவரிடம் கதை சொன்னேன். உடனே ஒப்புக் கொண்டார். தயாரிப்பாளரும் கிடைத்தார். அருண் விஜய் இதுவரை நடிக்கதாக ஒரு கேரக்டரில் நடிக்கிறார். ஷாலினி பாண்டேவுக்கும் மிக முக்கிய பங்கு இருக்கிறது. தமிழ், தெலுங்கிற்கு தனித்தனியாக படப்பிடிப்பு நடக்கும். கோல்கட்டா, கோவா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் படப்பிடிப்பு நடக்கிறது. என்றார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in