விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி |
தற்போது மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் மிக பிரமாண்டமாக உருவாகி வரும் படம் ஒடியன். இந்தப்படம் வரும் டிசம்பர் 14ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. விளம்பர பட இயக்குனரான ஸ்ரீகுமார் மேனன் இயக்கியுள்ளார். ஆச்சர்யமாக இவ்வளவு பிரமாண்டமான படத்திற்கு தமிழில் தொடர்ந்து வெற்றி படங்களுக்கு இசையமைத்து வரும் சாம் சி.எஸ் பின்னணி இசை அமைத்து வருகிறார்.
கிராமங்களில் மின்சாரம் என்பதே அறிமுகம் ஆகாத காலகட்டத்தில் நிகழும் கதை என்பதால் இதற்கு பின்னணி இசையில் கூடுதல் முக்கியத்துவம் கொடுக்க நினைத்துள்ளார் இயக்குனர். சாம் சி.எஸ்ஸும் அதற்கேற்றவாறு பின்னணி இசை கோர்ப்பு பணியில் தீவிரம் காட்டி வருகிறார். சமீபத்தில் சாம் சி.எஸ்ஸின் ஸ்டுடியோவிற்கு சென்றிருந்த இயக்குனர் ஸ்ரீகுமார் மேனன், அவர் படத்துக்காக இசையமைத்திருந்த ட்ராக்குகளை கேட்டு மிகவும் ஆச்சர்யப்பட்டு போனாராம்
அதை தொடர்ந்து, “படத்தின் பின்னணி இசை மிக பிரமாண்டமாக வந்திருக்கிறது. நிச்சயமாக 'ஒடியன்' படம் பின்னணி இசைக்காகவும் நிறைய பேசப்படும்” என தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார் இயக்குனர் ஸ்ரீகுமார் மேனன்.