தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
விஜய்சேதுபதி, திரிஷா நடிப்பில் கடந்த மாதம் வெளியான படம் 96. ஒளிப்பதிவாளர் பிரேம் குமார் இப்படத்தை இயக்கி இருந்தார். வணிகரீதியில் மிகப்பெரிய வெற்றியடைந்த இந்தப்படம் இன்னமும் பல்வேறு தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது.
96 படம் திரைக்கு வந்த சில நாட்களில் அப்படத்தின் மீது சர்ச்சை எழுந்தது. அதாவது, சில வருடங்களுக்கு முன்பு 92 என்ற பெயரில் சுரேஷ் என்ற உதவி இயக்குனர் உருவாக்கிய கதையை, பிரேம்குமார் திருடி 96 என்ற பெயரில் படமாக இயக்கி உள்ளார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
மேலும் 92 கதையை பாரதிராஜா தயாரிப்பதாகவும் இருந்தது. சுரேஷ் சொல்வது உண்மைதான், 96 படத்தின் கதை 92 கதையிலிருந்து திருடப்பட்டது என்று பாரதிராஜாவும் பகிரங்கமாக அறிவித்தார்.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து பிரேம் குமார் பத்திரிகையாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். அவருடன் இயக்குநர்கள் தியாகராஜா குமாரராஜா, பாலாஜி தரணிதரன் உள்ளிட்டவர்களும் பங்கேற்றனர்.
பிரேம்குமார் பேசியதாவது : 92 கதைக்கும் 96 கதைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. 96 படத்திற்கான முழு பவுண்டட் கதை என்னிடம் உள்ளது. 96 கதை என்னுடையது தான் என்பதை நிரூபிக்க ஆதாரம் உள்ளது. என் வாழ்வில் நடந்த சம்பவம் தான் இந்த கதை. பக்ஸ், பாலாஜி தரணிதரன், தியாகராஜா குமாரராஜா ஆகியோர் என்னிடம் கதை விவாதத்தில் இருந்தனர்.
படத்தின் டைட்டில் டிசைன், படம் தொடர்பான விளம்பரங்கள் வெளியானபோது எதிர்ப்பு தெரிவிக்காதவர்கள், படம் வெளியாகி வெற்றி பெற்றதும் எதிர்க்கிறார்கள். இந்தப்படத்தின் வெற்றியை கூட என்னால் கொண்டாட முடியவில்லை.