வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
நான் நடிக்கும் படங்களில் திறமையான நடிகர்களை வளர்த்து விட ஆசைப்படுகிறேன் என்கிறார் நடிகர் விஷ்ணு விஷால். அதுகுறித்து அவர் கூறுகையில், நான் அறிமுகமான வெண்ணிலா கபடிக்குழு படத்தில் தான் சூரி, அப்புக்குட்டி நடித்து பிரபலமானார்கள். அதன்பிறகு முண்டாசுப்பட்டி படத்தில் முனீஷ்காந்த், காளிவெங்கட் பிரபலமானார்கள். தற்போது ராட்சசன் படத்தில் சரவணன் என்பவர் வில்லனாக நடித்து பிரபலமாகியிருக்கிறார்.
இப்படி எனது படங்களில் நடித்தவர்கள் பிரபலமாகும்போது சந்தோசமாக உள்ளது. அதேபோன்று தொடர்ந்து எனது படங்களில் திறமையான புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும். எனக்கு கிடைக்கும் வெற்றியை அனைவருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் ஆசைப்படுகிறேன் என்கிறார் விஷ்ணு.