பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
சினிமாவில் சின்ன சின்ன கேரக்டர் ரோல்களிலும், ஒரு பாட்டுக்கும் ஆடி வந்த நடிகை சுஜா வருணி, பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சி மூலம் பிரபலமானார். இவரும், மறைந்த நடிகர் சிவாஜியின் பேரனும், ராம்குமாரின் மகனுமான சிவாஜிதேவ் என்கிற சிவகுமாரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.
சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்த நிலையில், வருகிற நவ., 19-ம் தேதி திருமணம் நடைபெறுகிறது. திரைப்பிரபலங்களை அழைக்கும் விதமாக அவர்களுக்கு அழைப்பிதழ் கொடுத்து வருகின்றனர் சுஜா - சிவகுமார். அந்தவகையில், நடிகர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து முதல் அழைப்பிதழை கொடுத்துள்ளனர்.
இதுப்பற்றி சுஜா கூறுகையில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் போதே கமலிடம், என் தந்தை இடத்தில் இருந்து எனது திருமணத்தை நடத்தி வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். அவரும், சம்மதம் சொன்னார். அதன்படி என் திருமணத்தை நடத்தி வைப்பதாக கமல் சொல்லியிருக்கிறார் என்கிறார்.