Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

வீரமாதேவி படத்தில் சன்னி லியோன் நடிக்க தடைகோரிய வழக்கு தள்ளுபடி

01 நவ, 2018 - 10:40 IST
எழுத்தின் அளவு:
Veeramadevi-problem-solved

சாமிடா, தம்பி வெட்டோத்தி சுந்தரம், சவுகார்பேட்டை படங்களை இயக்கிய வி.சி.வடிவுடையான் இயக்கும் புதிய படம் வீரமாதேவி. தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மொழிகளில் தயாராகும் இந்தப்படத்தில் வீரமாதேவியாக பிரபல ஆபாச பட நடிகை சன்னி லியோன் நடித்து வருகிறார். இதற்கு பல கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இந்தநிலையில் வீரமாதேவி கேரக்டரில் சன்னி லியோன் நடிக்க கூடாது என்று மதுரை செல்லூரைச் சேர்ந்த சரவணன் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், "வீரமாதேவி சோழ மன்னன் முதலாம் ராஜேந்திர சோழனின் மனைவி, சிறந்த வீராங்கனை, பல கோவில்களை கட்டியவர். அவரை சோழ மண்டலத்து மக்கள் தெய்வமாக வணங்கி வருகிறார்கள். அப்படிப்பட்டவர் கேரக்டரில் ஆபாச நடிகை சன்னி லியோன் நடிப்பது வீரமாதேவியை அவமானப்படுத்துவதாகும். எனவே அவர் நடிக்க தடை விதிக்க வேண்டும்" என்று கூறியிருந்தார்.


இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிமன்றம், "நடிகர், நடிகைகளில் யார் வேண்டுமானாலும், எந்த கதாபாத்திரத்தில் வேண்டுமானாலும் நடிக்கலாம். அவர்கள் நடிக்கும் கேரக்டருடன் அவர்களது தனிப்பட்ட வாழ்க்கையை ஒப்பிடக்கூடாது" என்று சொல்லி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in