ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
இந்தியாவில் நடக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் மிகப்பெரியது கோவா சர்வதேச திரைப்பட விழா. அந்த மாநில அரசே நடத்தும் விழா இது. இந்த ஆண்டுக்கான 49வது சர்வதேச திரைப்பட விழா, வருகிற நவம்பர் 20ந் தேதி முதல், 28ந் தேதி வரை 8 நாட்கள் நடக்கிறது. இதில் சுமார் 80 நாடுகளைச் சேர்ந்த 140 படங்கள் திரையிடப்படுகிறது.
இந்திய படங்கள் பிரிவில் 22 சிறந்த இந்திய படங்கள் திரையிடப்படுகிறது. போட்டிக்கு வந்த 190 படங்களில் இருந்து, இந்த 22 படங்கள் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. ராம் இயக்கத்தில் மம்முட்டி நடித்த பேரன்பு, ஒளிப்பதிவாளர் செழியன் இயக்கிய டூ லெட், பா.ரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கிய பரியேறும் பெருமாள் ஆகிய 3 படங்கள் தேர்வாகி உள்ளது. இத்துடன் நடிகர் திலகம் சிவாஜியை கவுரவப்படுத்தும் விதமாக பராசக்தி சிறப்பு திரைப்படமாக திரையிடப்படுகிறது. அதேப்போல் மறைந்த ஸ்ரீதேவியை கவுரவப்படுத்தும் விதமாக அவர் கடைசியாக நடித்த மாம் படம் திரையிடப்படுகிறது.
பொதுப்பிரிவில் கீர்த்தி சுரேஷ் நடித்த தெலுங்கு படமான மகாநடி (நடிகையர் திலகம்), சல்மான்கான் நடித்த டைகர் ஜிந்தா ஹே, சஞ்சய் லீலா பன்சாலி இயக்கிய பத்மாவத், மெக்னா குல்சர் இயக்கிய ராஷி ஆகிய படங்கள் திரையிடப்படுகிறது.