Advertisement

சிறப்புச்செய்திகள்

பிரபல பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் காலமானார் | உறவுக்காரருக்காக மாணவியை கடத்த சனாகான் முயற்சி; போலீஸ் வழக்கு பதிவு: சனாகான் தலைமறைவு | கமல் படத்துக்கு இசை! யுவன்ஷங்கரின் நீண்ட நாள் ஆசை நிறைவேறியது! | பகலவனில் விஜய்க்கு பதில் ஜெயம் ரவி நடிக்கிறார் | சுனாமி பிரச்னையை படமாக்கும் பிரபுசாலமன்! | ரஜினி சொன்ன அட்வைஸ்! குழப்பத்தில் கொலவெறி அனிருத் | வினய் படத்திலிருந்து பிந்து மாதவி நீக்கம்! | கோச்சடையானுக்குப்பிறகு தமிழ் படங்களில் நடிப்பேன்- தீபிகா படுகோனே | பின்வாங்கினார் தலைவா விஜய்! | இன்று கார்த்தி பிறந்த நாள்! 10 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கிறார்! |

சினிமா முதல் பக்கம் » கோலிவுட் செய்திகள் »

சித்தார்த் - பவர்ஸ்டார் மோதல்!

Title trouble for Siddharth and power starபடத்‌ தலைப்பு தொடர்பாக நடிகர் ‌சி்த்தார்த்துக்கும், பவர் ஸ்டார் என்று சொல்லும் டாக்டர் சீனிவாசனுக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. டைரக்டர் வெற்றிமாறனிடம் உதவியாளராக இருந்த மணிகண்டன் என்பவர் சித்தார்த்தை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். இப்படத்திற்கு தேசிய நெடுஞ்சாலை என்று பெயர் வைத்துள்ளனர். படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இது என்னுடைய படத்தலைப்பு என்று போர்கொடி தூக்கியுள்ளார் டாக்டர் சீனிவாசன்.

இதுகுறித்து புதுமுகம் மணிகண்டன் கூறுகையில், நான் சித்தார்த்தை வைத்து தேசிய நெடுஞ்சாலை என்ற படத்தை பெங்களூரில் வைத்து சூட்டிங் நடத்தி வருகிறேன். கல்லூரி வாழ்க்கையை மையமாக வைத்து, முழுநீள பொழுதுபோக்கு படமாக இப்படத்தை இயக்கி வருகிறேன். இதுஒரு ரோடு சப்ஜெக்ட் என்பதால் படத்துக்கு தேசிய நெடுஞ்சாலை என்று பெயர் வைத்துள்ளோம். ஆனால் இது என்னுடைய படத்தலைப்பு என்று சீனிவாசன் கூறி வருகிறார். நாங்கள் அவரை தொடர்பு கொண்டு பேசி வருகிறோம் ஆனால் அவர் முடியாது என்று மறுத்து வருகிறார். இதனால் இப்போது என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகிறோம். படத்திற்கு வேறு ஒரு நல்ல தலைப்பை தேடி வருகிறோம் என்று கூறியுள்ளார்.

பவர் ஸ்டார் கூறுகையில், தேசிய நெடுஞ்சாலை படத்தில் நானும், சங்கவியும் நடித்து வருகிறோம். இப்படத்தின் சூட்டிங் கிட்டத்தட்ட முடியும் தருவாயில் உள்ளது. விரைவில் படத்தை ரிலீஸ் செய்யவுள்ளேன். ஆனால் இப்போது சித்தார்த் படத்துக்கு இதே தலைப்பை வைத்துள்ளனர். நான் என் படத்தின் தலைப்பை மாற்ற மாட்டேன். இது என் பட டைட்டில் என்று கூறியுள்ளார்.

சமீபகாலமாக படத்தலைப்பு பஞ்சாய்த்து பெரும் பிரச்னையாக உள்ளது. கடந்த வாரம் விஷாலின் சமர் படமும் இதே பிரச்னையால் தவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Tags »
Title trouble, Siddharth, power star Dr.srinivasan, படத்தலைப்பு, சித்தார்த், பவர் ஸ்டார் சீனிவாசன், மோதல்
Share  
Bookmark and Share


வாசகர் கருத்து (4)

kk - Chennai  ( Posted via: Dinamalar Android App )
2012-05-12 14:48:18 Report Abuse
kk first powerstar ங்கற பேர் இவனோடது இல்ல
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Velu - chennai,இந்தியா
2012-05-11 18:03:58 Report Abuse
Velu Mr பவர்! சங்கவியோட அப்பாவா நீங்க நடிச்சிங்கலா? அல்லது சங்கவி உங்க அம்மாவா நடிச்சிங்கலா? உங்க ஜோடி பொருத்தம் ரொம்ப நல்லாயிருக்கும்!!!!!?
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
boys rocks - trichy  ( Posted via: Dinamalar Android App )
2012-05-09 23:22:38 Report Abuse
boys rocks அடம்பிடிக்காதி்ங்க பவர், நமக்கு இதல்லாஒத்துவராது
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
sudha - pattukkottai  ( Posted via: Dinamalar Android App )
2012-05-09 17:57:36 Report Abuse
sudha அய்யா powerstar pls stop joking and enough acting. ஏன் நடிக்கனும்னு அடம்பிடிக்கிறீங்க. அதுவும் சங்கவிகூட. என்ன ஒரு confident????????? நீங்க நல்லா ஒரு round? ????வருவீங்க .
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in