ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
'பாகுபலி' படத்தின் மூலம் உலக அளவில் புகழ் பெற்றவர் நடிகை அனுஷ்கா. கடைசியாக 'பாகமதி' படத்தில் நடித்தார். அதற்குப் பிறகு அவர் எந்த புதுப் படங்களிலும் நடிக்க சம்மதிக்கவில்லை. அதனால், அனுஷ்காவுக்குத் திருமணம் என்ற தகவல் பரவலாகப் பரவியது.
'இஞ்சி இடுப்பழகி' படத்திற்காக அவர் தன்னுடைய உடலை குண்டாக மாற்றினார். ஆனால், அதன் பின் அந்த குண்டுத் தோற்றத்தை அவரால் பழைய நிலைக்குக் கொண்டு வரவே முடியவில்லை. 'பாகுபலி 2' படத்தில் கூட சில கோடி செலவு செய்துதான் அவரை கொடியிடை இளவரசியாகக் காட்டினார்கள்.
அனுஷ்காவின் திருமணமும் அவருடைய தோற்றத்தால்தான் தள்ளிப் போவதாக டோலிவுட்டில் ஒரு தகவல் உள்ளது. அவருடைய உடலை பழைய நிலைக்குக் கொண்டு வர அவர் வெளிநாட்டிற்கு சிகிச்சைக்கு சென்றிருக்கிறார். திருமணத்திற்கு முன்பாக பழையபடி மாற அவர் முடிவு செய்துவிட்டாராம்.
இதனிடையே, இன்ஸ்டாகிராமில் தன் காலின் புகைப்படம் ஒன்றை அனுஷ்கா பதிவிட்டுள்ளார்கள். அவருடைய விரலில் படர்ந்துள்ள ஒரு கொடி காலில் மெட்டி அணிந்திருப்பது போலக் காட்டுகிறது. அந்த புகைப்படத்திற்கு 'எந்த தலைப்பும் தேவையில்லை' என்று அனுஷ்கா குறிப்பிட்டிருக்கிறார்.
அனுஷ்காவின் 38வது பிறந்த நாள் வரும் நவம்பர் 7ம் தேதி வர உள்ளது. அன்றைய தினம் அவருடைய திருமண அறிவிப்பு வெளியாகலாம் எனச் சொல்கிறார்கள்.