பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
'முண்டாசுப்பட்டி' படத்தைத் தொடர்ந்து பல வருட போராட்டத்துக்குப் பிறகு விஷ்ணு விஷால் நடித்த 'ராட்சசன்' படத்தை இயக்கியிருந்தார் ராம்குமார். கடந்த சிலர வாரங்களுக்கு முன் வெளியான ராட்சசன் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று இன்னமும் சில தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
ராட்சசன் படம் வெளிவரும் முன்பே தனுஷிடம் ஒரு கதை சொன்னார் ராம்குமார். அந்த கதை தனுஷுக்குப் பிடித்துப்போனதை தொடர்ந்து தனது 3-வது படத்தின் பணிகளைத் துவங்கிவிட்டார். ராட்சசன் படத்தைப் போல் மாட்டிக்கொள்ளக் கூடாது என்பதால் 6 மாதத்திற்குள் படத்தை முடித்துவிட முடிவு செய்திருக்கிறார் ராம்குமார். இப்படத்தை கலைப்புலி தாணு தயாரிக்கவுள்ளார்.
பேண்டஸி காமெடிப்படமாக உருவாகும் இப்படத்தில் லட்சுமி மேனன் கதாநாயகியாக நடிப்பதாக செய்திகள் வெளியாகின. லட்சுமி மேனனை தனுஷ் சிபாரிசு செய்ததாகவும் தகவல் அடிபட்டது.
ராட்சசனுக்கு பிறகு தனுஷ் உடனான திரைப்படத்திற்கு திரைக்கதை அமைக்கும் பணியையே இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறோம். அதற்குள்ளாகவே கதாநாயகி குறித்தான இது போன்ற தவறான தகவல்களை யாரும் வெளியிட வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன்." என்று டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார் ராம்குமார்.