வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
வரும் தீபாவளிக்கு விஜய் நடித்த சர்கார் படம் வெளியாக இருக்கிறது. கேரளாவில் விஜய்க்கு ரசிகர்கள் அதிகம் என்பதால் விஜய் படம் ரிலீஸாகும் சமயத்தில் வேறு எந்தப்படமும் ரிலீசாவதில்லை. மேலும் அங்கே மலையாள படங்களுக்கு தீபாவளி ரிலீஸ் கொண்டாட்டம் என்பதெல்லாம் கிடையாது. அதனால் இந்தமுறையும் விஜய் படம் சோலோவாக கிட்டத்தட்ட 3௦௦ தியேட்டர்களில் ரிலீஸாகும் என என எதிர்பார்க்கப்ட்டது.
ஆனால் தற்போது மோகன்லால் நடித்துள்ள ட்ராமா படம் வரும் நவ-1ஆம் தேதியில் ரிலீசாக இருக்கிறது. அதனால் வழக்கம்போல மோகன்லால் படத்திற்கு ஒதுக்கவேண்டிய தியேட்டர்கள் ட்ராமாவுக்கும் ஒதுக்கப்படும். அதனால் நான்கு நாட்கள் கழித்து தீபாவளிக்கு வெளியாகும் சர்கார் படத்திற்கு அதிக அளவிலான தியேட்டர்கள் ஒதுக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது.
ஒருவேளை மோகன்லால் படத்தின் தீவிரம் முதல் நான்கு நாட்களில் கொஞ்சம் குறையும் என்பதால் ட்ராமா காட்சிகளை குறைத்து, சர்கார் காட்சிகளின் எண்ணிகையை வேண்டுமானால் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக சொல்கிறார்கள்.