ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
அஜித்தை வைத்து வீரம், வேதாளம், விவேகம் படங்களை இயக்கிய சிவா, தற்போது நான்காவது முறையாக அஜித்தை வைத்து விஸ்வாசம் படத்தை இயக்கி வருகிறார். சத்யஜோதி நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது மும்பையில் நடைபெற்று வருகிறது.
பொங்கலுக்கு வெளியிடும் திட்டத்தில் அதற்கான பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர். இதற்கிடையில் சில தினங்களுக்கு முன்பு விஸ்வாசம் படத்தின் செகண்ட் லுக்கை வெளியிட்டனர். இது ரசிகர்களை திருப்திப்படுத்தவில்லை.
இதையடுத்து விரைவில் படத்தின் புதிய போஸ்டரை வெளியிடும்படி பட நிறுவனத்திடம் அஜித் தெரிவித்ததாக தகவல் அடிபடுகிறது. அதுமட்டுமல்ல அந்த போஸ்டரை டிசைனை தன்னிடம் காட்டி ஒப்புதல் பெற்ற பிறகே வெளியிட வேண்டும் என்று படக்குழுவிடம் கேட்டுள்ளாராம். அதற்கான ஏற்பாடுகளை படநிறுவனம் தற்போது செய்து வருகிறது.