Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கார்த்தியின் தனி சாதனை

27 அக், 2018 - 13:34 IST
எழுத்தின் அளவு:
karthi-makes-new-record

நடிகர் சிவகுமாரின் இளையமகனும், நடிகர் சூர்யாவின் தம்பியுமான கார்த்தி, சென்னையில் இஞ்சினியரிங் முடித்துவிட்டு, அமெரிக்காவில் மேல்படிப்பு முடித்து சென்னை திரும்பினார். வந்ததும் இயக்குனர் மணிரத்னத்திடம் 'ஆய்த எழுத்து' படத்தில் உதவி இயக்குனராக வேலைக்குச் சேர்ந்தார். அதன்பின் அமீர் இயக்கிய 'பருத்தி வீரன்' படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். அந்தப் படத்திலிருந்து தற்போது அவர் நடிக்கும் 17வது படமான 'தேவ்' படம் வரை ஒவ்வொரு படத்திலும் வெவ்வேறு இயக்குனர்களின் இயக்கத்தில் நடித்திருக்கிறார் கார்த்தி.

ஒரு முறை நடித்த இயக்குனர்களின் படத்தில் கார்த்தி திரும்பவும் நடித்ததில்லை. தமிழ் சினிமாவில் இப்படி வேறு யாராவது நடித்திருக்கிறார்களா என்பது சந்தேகம்தான். கார்த்தி நடித்து இதுவரை வெளிவந்த 16 படங்களில் “பருத்தி வீரன், பையா, நான் மகான் அல்ல, சிறுத்தை, மெட்ராஸ், கொம்பன், தோழா, தீரன் அதிகாரம் ஒன்று, கடைக்குட்டி சிங்கம்” ஆகிய 9 படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்துள்ளன. “ஆயிரத்தில் ஒருவன், சகுனி, அலெக்ஸ் பாண்டியன், ஆல் இன் ஆல் அழகுராஜா, பிரியாணி, காஷ்மோரா, காற்று வெளியிடை” ஆகிய படங்கள் தோல்விப் படங்களாக அமைந்துள்ளன. தொடர்ச்சியாக நான்கு தோல்விப் படங்களைக் கொடுத்து 'மெட்ராஸ்' படம் மூலம் மீண்டு வந்தார் கார்த்தி.


இத்தனை படங்களில் 'சகுனி' படத்தில் மட்டுமே அறிமுக இயக்குனருக்கு வாய்ப்பு கொடுத்தார். அதற்குப் பிறகு இப்போதுதான் 'தேவ்' படத்தின் மூலம் மீண்டும் ஒரு அறிமுக இயக்குனரின் படத்தில் நடிக்கிறார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in