‛ஜெயிலர் 2' பற்றி வசந்த் ரவி பகிர்ந்த தகவல் | சர்வதேச விருது பட்டியலில் சண்டை இயக்குனர் அனல் அரசு | அமிதாப், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது | லிங்குசாமிக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றாத கமல் | வீர தீர சூரன் - 'டிராப்' ஆன படத்தின் பெயரில் 'விக்ரம் 62' | 'புஷ்பா 2' - ஹிந்தி உரிமை இவ்வளவு விலையா? | ரூ.5 கோடி தாண்டாத தமிழ்ப் படங்கள் : ரூ.50 கோடியைக் கடந்த மலையாளப் படங்கள் | வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! |
கணேசா இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள படம் திமிறு புடிச்சவன். நிவேதா பெத்துராஜ் நாயகியாக நடித்துள்ள இந்தப்படம், தீபாவளிக்கு திரைக்கு வருகிறது. படத்தில் முருகவேல் என்ற இன்ஸ்பெக்டர் வேடத்தில் நடித்திருக்கிறார் விஜய் ஆண்டனி. இதற்கு முன்பு பல படங்களில் சீரியசான வேடங்களில் நடித்த அவர், இந்த படத்தில் சீரியசும், ஆவேசமும் கலந்த போலீசாக நடித்திருக்கிறார்.
தீபாவளிக்கு விஜய்யின் சர்கார் படம் வெளியானபோதும், திமிறு புடிச்சவனையும் தைரியமாக களமிறக்கும் விஜய் ஆண்டனி, பிச்சைக்காரன் படத்திற்கு பிறகு தெலுங்கிலும் தனக்கு நல்ல மார்க்கெட் இருப்பதால் அங்கும் அதிகமான தியேட்டர்களில் ரோஷக்காடு என்ற பெயரில் திமிரு புடிச்சவனை டப்பிங் செய்து வெளியிடுகிறார்.