இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார். ராதாரவி, பழ கருப்பையா நடிக்கும் 'சர்கார்' படம் தீபாவளி ரிலீசாக நவம்பர் 6-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
விஜய் ரசிகர்களுக்கு மேலும் மகிழ்ச்சியை தரும்விதமாக ஒரு தகவல் கடந்த சில தினங்களாக அடிபட்டது. அதாவது, 'சர்கார்' படத்தை தீபாவளிக்கு 4 நாட்கள் முன்னதாக வெளியிட திட்டமிட்டு வருகிறார்கள் என்பதே அந்த தகவல்.
நவம்பர் 6-ஆம் தேதி, செவ்வாய் கிழமை தீபாவளி வருவதால் அதற்கு முன்னதாக அதாவது நவம்பர் 2-ஆம் தேதி 'சர்கார்' படத்தை வெளியிட்டால் வெள்ளி, சனி, ஞாயிறு என்று தொடர்ந்து விடுமுறை நாட்கள் வருவதால் 'சர்கார்' படத்திற்கு பெரிய வசூல் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதாக சொல்லப்பட்டது.
இந்நிலையில் சர்க்கார் படம் நவம்பர் 2 ஆம் தேதி வெளிவரவில்லை தீபாவளி அன்று தான் வெளிவருகிறது என்பதை உறுதிப்படுத்தும் விதமாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக தீபாவளி வெளியீடு என்று அறிவித்துள்ளது.