ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
மீ டூ விவகாரத்தில் தினசரி புதுப்புது விவகாரங்கள் கிளம்பிக் கொண்டே இருக்கின்றன. இதில் சிக்கிய நடிகர்கள் ஒருவிதமான கண்டனங்களை சந்தித்து வருகிறார்கள் என்றால், இந்த விவகாரத்தில் வாய்திறக்க மறுக்கும் முன்னணி ஹீரோக்களுக்கு அதைவிட அர்ச்சனைகள் அதிகம் கிடைத்து வருகிறது.
விக்ரம் வேதா, இவன் தந்திரன் படங்களில் நடித்த கன்னட நடிகையான ஸ்ரத்தா ஸ்ரீநாத், முன்னணி ஹீரோக்களை தனது டுவிட்டர் பக்கத்தில் செமையாக கிண்டலடித்து பதிவிட்டுள்ளார்.
அதில், “எனக்கு ரொம்பவே ஆச்சர்யமாக இருக்கிறது. 7௦ எம்.எம் திரையில் தங்களது அம்மாக்களையும் சகோதரிகளையும் காப்பாற்ற ஒரு டஜன் ரவுடிகளை அடித்து துவைத்து, லாரிகளை ஆகாயத்தில் பறக்கவிட்ட்ட அந்த மனிதர்கள் எல்லாம் எங்கே போனார்கள்.? தயவுசெய்து உங்களுடைய மாயாஜாலத்தை இப்போது காட்டுங்கள். ஏதாவது சொல்லுங்கள்.. இந்த விஷயத்தில் நம் சூப்பர் ஹீரோக்கள் என்னதான் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள் என தெரிந்துகொள்ள விரும்புகிறேன்” என கூறியுள்ளார்.