டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா நாயகனாக நடித்துள்ள படம் மான்ஸ்டர். பிரியா பவானி சங்கர் நாயகியாக நடித்துள்ளார். இந்த படத்தை ஒருநாள் கூத்து நெல்சன் வெங்கடேசன் இயக்கியிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்ட நிலையில், இறுதிகட்ட பணிகள் நடந்து வருகிறது.
எஸ்.ஜே.சூர்யாவுடன் இணைந்து ஒரு எலியும் முக்கியமான ரோலில் நடித்துள்ளது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ள நிலையில் படம் குறித்து டுவிட்டரில் ஒரு தகவல் வெளியிட்டுள்ளார் எஸ்.ஜே.சூர்யா.
அதில், பல புலிகளோட நடிச்ச என்னை ஒரு எலியோட நடிக்க வச்சிருக்காங்க. ஆனால் உங்களுக்குத் தெரியுமா, இந்த எலி தான் எதிர்காலத்தில் என்னை ஒரு புலி ஆக்கப்போவுது. படப்பிடிப்பு முடிந்து விட்டது. விரைவில் தியேட்டர்களில் என்று பதிவிட்டுள்ளார் எஸ்.ஜே.சூர்யா.