ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பிரேம் இயக்கத்தில் சிவராஜ்குமார், நான் ஈ சுதீப், மிதுன் சக்ரவர்த்தி, எமி ஜாக்சன் மற்றும் பலர் நடித்து கன்னடத்தில் கடந்த வாரம் வெளியான படம் 'தி வில்லன்'. சுமார் 45 கோடி ரூபாய் செலவில் தயாரான இந்தப் படம் கன்னடத் திரையலகத்தில் முதல் முறையாக 100 கோடி வசூலைத் தொடுமா என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
படம் வெளியான முதல் வார இறுதியில் மட்டும் 30 கோடி ரூபாய் பங்குத் தொகையை இந்தப் படம் அளித்துள்ளதாக படத்தின் தயாரிப்பாளரே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அப்படியென்றால் படத்தின் வசூல் சுமார் 60 கோடி இருந்திருக்கும் என்கிறார்கள்.
புனித் ராஜ்குமார், பிரியா ஆனந்த் நடித்து 2017ல் வெளிவந்த 'ராஜகுமாரா' படம்தான் சுமார் 60 கோடி வசூலைப் பெற்று கன்னடத் திரையுலகத்தில் அதிக வசூலைப் பெற்ற படங்களில் முதலிடத்தில் உள்ளது. அந்த சாதனையை தற்போது 'தி வில்லன்' முறியடித்துவிட்டதாகச் சொல்கிறார்கள்.
மூன்று வார முடிவிற்குள் 'தி வில்லன்' 100 கோடி ரூபாய் வசூலைத் தாண்டிவிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.