விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் |
'தேவி' படம் மூலம் மீண்டும் தமிழில் நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் பிரபுதேவா. தற்போது 'யங் மங் சங், சார்லி சாப்ளின் 2, பொன் மாணிக்கவேல், தேள், தேவி 2' ஆகிய படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
'தேள்' படத்தை நடன இயக்குனரும், நடிகருமான ஹரிகுமார் இயக்குகிறார். இந்தப் படத்தில் பிரபுதேவா ஜோடியாக கன்னட நடிகை சம்யுக்தா ஹெக்டே நடிக்க உள்ளார். 'கிர்ரக் பார்ட்டி' என்ற கன்னடப் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். பின்னர் 'காலேஜ் குமார்' என்ற கன்னடப் படத்திலும் நடித்தார். தெலுங்கில் ரீமேக்கான 'கிர்ரக் பார்ட்டி' படத்திலும் நாயகியாக நடித்துள்ளார்.
கன்னடம், தெலுங்கிற்குப் பிறகு தற்போது தமிழில் அறிமுகமாகிறார். ஏற்கெனவே, பிரதீப் இயக்கத்தில் ஜெயம் ரவி, காஜல் அகர்வால் நடிக்கும் புதிய படத்தில் இரண்டாவது நாயகியாக நடிக்க சம்யுக்தா ஒப்பந்தம் ஆனார். அவர் இரண்டாவதாக நடிக்கும் தமிழ்ப் படம் 'தேள்'. பிரபுதேவாவின் ரசிகையாக இருந்து இப்போது அவருடைய படத்திலேயே நாயகியாக நடிப்பது மகிழ்ச்சி என்கிறார் சம்யுக்தா.