ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நடிகர் மாதவனை செல்லமாக மேடி என்று அழைப்பார்கள். அதையே படத்தின் தலைப்பாக வைத்து தயாராகிறது மேடி அட் மாதவ் என்ற படம். ஆன்மே கிரியேஷன்ஸ் சார்பில் அனில் குமார் தயாரிக்கிறார். அவரே கதை, திரைக்கதையும் எழுதியுள்ளார்.
மாஸ்டர் அஞ்சய் தான் படத்தின் ஹீரோ. அவனுடன், பிரபு, தலைவாசல் விஜய், நிழல்கள் ரவி, ரிச்சா பாலோட், வையாபுரி ரியாஸ்கான் உள்பட பலர் நடிக்கிறார்கள். இனிது இனிது படத்தில் நடித்த ஆதிக் புதுமுகம் நேகாகான் இளம் ஜோடியாக நடிக்கிறார்கள். அஜய் வின்செண்ட் ஒளிப்பதிவு செய்கிறார். பிரதீஷ் தீபு இயக்குகிறார். படம் பற்றி அவர் கூறியதாவது:
விஞ்ஞான அறிவையும், தாய்ப்பாசத்தையும் மையக்கருவாக கொண்டு உருவாக்கப்படும் படம். அறிய கண்டுபிடிப்பையும், இளைய சமுதாயத்தின் திறமைகளையும் ஒருங்கிணைந்து இத்திரைப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இறுதிக்கட்ட படப்பிடிப்பு தாய்லாந்தில் நடைபெற்றது. மாதவ் கதாபாத்திரத்தில் நடிக்கும் மாஸ்டர் அஜய், புலியுடன் நடித்த காட்சிகள் தொடர்ந்து 8 நாட்கள் படமாக்கப்பட்டது. வீரமும், விவேகமும் மிகுந்த கதாபாத்திரமாக மாதவ் கதாபாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளது.
கோவா, மூனாறு, செர்ராய் கடற்கரை, நிலம்பூர், சாயல்குடி, பொள்ளாச்சி, சென்னை ஆகிய இடங்களில் 100 நாட்களுக்கு மேலாக படப்பிடிப்பு நடைபெற்றது. சிறுவர்கள், இளைஞர்கள், பெரியவர்கள் என அணைத்து தரப்பினரும் ரசிக்கும் விதமாக மேடி அட் மாதவ் இருக்கும். என்றார்.