'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி நடித்துள்ள சர்கார் படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி உள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார். இந்தப் படம் தீபாவளிக்கு வெளிவருதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது தீபாவளிக்கு முன்னதாகவே வெளிவரும் என்று தெரிகிறது.
இந்த ஆண்டு தீபாவளி நவம்பர் 6-ம் தேதி செவ்வாய்கிழமை வருகிறது. செவ்வாய் கிழமையில் படத்தை வெளியிட யாரும் விரும்ப மாட்டார்கள். அதனால் அதற்கு முந்தைய வெள்ளிக்கிழமையான நவம்பர் 2-ம் தேதியே படத்தை வெளியிட தயாரிப்பு தரப்பு முடிவு செய்திருக்கிறது.
2ம் தேதி வெளியிடப்பட்டால் வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில் ஓப்பனிங் இருக்கும். அதற்கடுத்து இருப்பது ஒரே ஒரு திங்கட்கிழமை, அதை தாண்டிவிட்டால் மறுநாள் தீபாவளி அதைத் தொடர்ந்து அந்த வாரம் முழுமைக்கும் படத்தை கொண்டு சென்று விடலாம். படம் எப்படி இருந்தாலும் 10 நாள் கலெக்ஷனை அள்ளிவிடலாம். அது படத்தின் பட்ஜெட்டை மீட்டுக் கொடுத்து விடும் என்று தயாரிப்பு தரப்பும், படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களும் நம்புகிறார்கள்.