இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
மலையாள திரையுலகில் இளம் நடிகர்களான துல்கர், நிவின்பாலி, பஹத் பாசில் ஆகியோர் நிதனாமாக ஒவ்வொரு படமாக நடித்துக் கொண்டு இருக்க, சீனியர்களான மம்முட்டி, மோகன்லால் இருவரும் அரை டஜன் படங்களுக்கு குறைவில்லாமல் கைவசம் வைத்துக் கொண்டு வேகமாக ஓடிக் கொண்டு இருக்கிறார்கள். இந்தநிலையில் மோகன்லால் தனது புதிய பட அறிவிப்பு ஒன்றை திடீரென வெளியிட்டுள்ளார்.
படத்தின் பெயர் 'இட்டிமாணி மேட் இன் சைனா'. அறிமுக இயக்குனரான ஜிபி ஜோஜு இந்தப்படத்தை இயக்குகிறார். மோகன்லாலின் ஆசீர்வாத் சினிமாஸ் நிறுவனம் தான் இந்தப்படத்தை தயாரிக்கிறது. முற்றிலும் நகைச்சுவையாக இந்தப்படம் உருவாக உள்ளதாம்.
தற்போது மோகன்லால் நடித்துவரும் படங்கள், நடிக்க ஒப்புக்கொண்ட படங்கள் எல்லாம் முன்கூட்டியே யூகங்களாக கசிந்து, பின்னர் உண்மையாகின. ஆனால் இவை எதற்கும் இடம் கொடுக்காமல் ஏற்கனவே இடைவெளி இன்றி படங்களில் நடித்துவரும் நிலையில் மோகன்லால் இந்தப்படத்தை திடீரென அறிவித்துள்ளதுதான் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.