'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் | அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் | இயக்குனர் 'பசி' துரை மறைவு | சினிமாவில் வளர திறமை மட்டுமே போதாது : பரிணிதி சோப்ரா | 25 நாட்களில் 150 கோடி வசூலித்த ஆடுஜீவிதம் |
கடந்த ஒரு வருடத்திற்கும் மோகன்லால் நடிப்பில் மலையாளத்தில் மிக பிரமாண்டமாக தயாராகி வருகிறது ஒடியன் படம். விளம்பரப்பட்ட இயக்குனரான ஸ்ரீகுமார் மேனன் இயக்கி வரும் இந்தப்படத்தில், மோகன்லால் பிளாக் மேஜிசியனாக வித்தியாசமான கேரக்டரில், வித்தியாசமான தோற்றத்தில் நடித்து வருகிறார். பிரகாஷ்ராஜ் வில்லனாகவும், மஞ்சு வாரியர் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர்.
இந்தப்படத்தின் படப்பிடிப்பு கேரளா, மங்களூர், வாரணாசி பூடான் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்று வந்தது. சுமார் 147 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்ற நிலையில் நேற்றுடன் படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளனர் ஒடியன் படக்குழுவினர். வரும் டிச-14ஆம் தேதி இந்தப்படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.