அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வரை மலையாள படம் ஒன்று 5௦ கோடி வசூலை எட்டுவது என்பது கனவாகவே இருந்தது. மோகன்லாலின் த்ரிஷயம் படம் மாதக்கணக்கில் ஓடித்தான் அந்த சாதனையை முதன்முதலாக செய்ய முடிந்தது. அதன்பின் வந்த சில படங்கள் 5௦ கோடியை வசூலித்தன என்றாலும் அதற்கு குறைந்தபட்சம் மூன்று வார காலம் தேவைப்பட்டது.
ஆனால் கடந்த வாரம் மோகன்லால் - நிவின்பாலி நடிப்பில் வெளியான காயம்குளம் கொச்சுன்னி படம் வெளியான பத்தாவது நாளிலேயே 55 கோடி வசூலித்து, இந்த சாதனையை செய்த முதல் மலையாளப்படம் என்கிற பெயரை பெற்றுள்ளது. இதே வேகத்தில் போனால் ஒரே மாதத்தில் 1௦௦ கோடி கிளப்பிலும் இந்தப்படம் இணைந்து விடும் என்கிறார்கள் சினிமா வர்த்தகர்கள்.