நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' |
விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி மற்றும் பலர் நடிக்கும் 'சர்கார்' படத்தின் டீசர் அக்டோபர் 19ம் தேதி மாலை 6 மணிக்கு யு டியூபில் வெளியிடப்பட்டது. வெளியான சில மணி நேரங்களிலேயே 1 கோடி பார்வைகள், 10 லட்சம் லைக்குகள் என புதிய சாதனையைப் படைத்தது. 292 நிமிடங்களில் 10 லட்சம் லைக்குகள், 330 நிமிடங்களில் 1 கோடி பார்வைகள் என சாதனை படைத்தது. அடுத்து 48 மணி நேரத்தில் 2 கோடி பார்வைகளைக் கடந்துள்ளது.
'சர்கார்' டீசரின் இந்த சாதனை விஜய் ரசிகர்கள் மத்தியில் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு முறை விஜய் படத்தின் டீசர் வெளியாகும் போது அது புதிய சாதனைகளைப் படைக்கிறது என்ற மகிழ்ச்சியில் அவர்கள் இருக்கிறார்கள். விஜய் நடித்த படங்களிலேயே 'மெர்சல்' டீசர்தான் யு டியூபில் அதிக பார்வைகளைப் பெற்றுள்ள டீசராக இருக்கிறது. அந்த டீசருக்கு 4 கோடிக்கும் அதிகமான பார்வைகள் கிடைத்துள்ளன. அந்த டீசரின் லைக்குகளை முறியடித்த 'சர்கார்' டீசர், இன்னும் பார்வைகளை முறியடிக்க வேண்டும்.
ஏற்கெனவே, 'சர்கார்' படத்தில் இடம் பெற்றுள்ள 'சிம்டாங்காரன்' பாடல் 2 கோடி பார்வைகளைக் கடந்துள்ளது. மேலும், 3 பாடல்கள் 1 கோடி பார்வைகளை நெருங்கி வருகின்றன.