ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
மும்பை: பாலிவுட் நடிகை தீபிகா படுகோனேவுக்கும், நடிகர் ரன்வீர் சிங்குக்கும், அடுத்த மாதம் திருமணம் நடக்கிறது.ஹிந்தி திரையுலகின் முன்னணி நடிகை, தீபிகா படுகோனே ௩௨. ஓம் சாந்தி ஓம், பத்மாவதி உள்ளிட்ட பல படங்களில் நடித்துஉள்ளார். ஹிந்தி திரையுலகின் முன்னணி நடிகர் ரன்வீர் சிங், ௩௩. தீபிகாவும், ரன்வீரும் இணைந்து, ராம்லீலா, பத்மாவதி உள்ளிட்ட படங்களில் நடித்துஉள்ளனர்.தீபிகாவும், ரன்வீரும், தங்களின் திருமணம் குறித்து, டுவிட்டர் சமூக வலைதளத்தில் நேற்று தனித்தனியாக தெரிவித்தனர். அவர்கள் கூறியுள்ளதாவது:குடும்பத்தினரின் சம்மதத்துடனும், ஆசியுடனும், எங்களின் திருமணம் மற்றும் அது தொடர்பான சடங்குகள், நவ., 14 மற்றும் 15ம் தேதிகளில் நடக்க உள்ளன என்பதை, மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர். ஆனால், திருமணம் எங்கு நடக்கிறது என்பதை இருவரும் தெரிவிக்கவில்லை.