ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
நல்லெண்ணை விளம்பரத்தின் மூலம் புகழ்வெற்றவர் நல்லெண்ணை சித்ரா. சினிமா மற்றும் சின்னத்திரையில் நடித்து வந்தார். அதன் பிறகு இரண்டிலும் இருந்தும் விலகி விட்டார். தற்போது 25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்திருக்கிறார். என் சங்கத்து ஆள அடிச்சது எவண்டா என்ற படத்தில் டெல்லி கணேஷ் ஜோடியாக நடித்துள்ளார்.
இந்தப் படத்தில் விகாஷ், மதுமிதா என்ற புதுமுங்கள் ஹீரோ, ஹீரோயினாக நடிக்கிறார்கள். எஸ்.எச்.மீடியா நிறுவனத்தின் சார்பில் சாகுல் ஹமீது தயாரிக்கிறார். லோகேஷ் இசை அமைத்திருக்கிறார், நவீன் மணிகண்டன் என்ற புதுமுகம் ஒளிப்பதிவு செய்து இயக்கி இருக்கிறார். படம் பற்றி அவர் கூறியதாவது:
யாரையும் சாதாரணமாக நினைக்கக் கூடாது. யார் எப்போது எந்த நிலைக்கு வருவார்கள் என்றே தெரியாது' என்பதுதான் இந்தப் படத்தின் கதைக் கரு. குட்டி சுவற்றில் உட்கார்ந்து வெட்டியாக பொழுதை கழிக்கும் இளைஞர்களைப் பற்றிய கதைதான் இந்த படம்.
காதல், காமெடி, செண்டிமெண்ட் என்று அனைத்தையும் சேர்த்து ஜாலியான ஒரு படத்தை கொடுத்திருக்கிறேன். படத்தில் காமெடி ஹைலைட்டாக இருக்கும். ராகுல் தாத்தா, ராமர் ஆகியோரது காமெடி பெரிய அளவில் பேசப்படும். மொத்தப் படத்தையும் நாகர்கோவிலில் படமாக்கியிருக்கிறோம். எப்படிப்பட்ட மனநிலையோடு தியேட்டருக்குள் வந்தாலும், படம் முடிந்து வெளியே செல்லும்போது ரசிகர்கள் சந்தோஷமான மனநிலையோடு செல்வார்கள். என்கிறார் இயக்குநர் நவீன் மணிகண்டன்.