பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் அஜித் இரண்டாவது முறையாக நடிக்கும் படம் விஸ்வாசம். சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நான்காவது முறையாக நடிக்கும் படம் இது.
நயன்தாரா கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில், தம்பி ராமையா, விவேக், யோகி பாபு, கோவை சரளா, ரமேஷ் திலக் என பெருங்கூட்டமே நடித்து வருகிறது. கடந்த சில மாதங்களாக சென்னை, ஹைதராபாத், மும்பை என பல்வேறு ஊர்களில் மிக விறுவிறுப்பாக நடந்து வந்த விஸ்வாசம் படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
நவம்பர் முதல் வாரத்துடன் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைகிறது. விஸ்வாசம் படம் தொடங்கப்பட்டபோது தீபாவளிக்கு ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டது. தீபாவளிக்கு விஜய் நடித்த சர்கார் படம் வெளியாவதை ஒட்டி விஸ்வாசம் படத்தை பொங்கலுக்கு தள்ளி வைத்தனர்.
இப்போது வரை விஸ்வாசம் படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்யவே திட்டமிட்டிருக்கின்றனர். ஆனால் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் பேட்ட படம் பொங்கலுக்கு வெளியாகிறது. எனவே விஸ்வாசம் படத்தை சில வாரங்கள் தள்ளி ரிலீஸ் செய்யலாமா என்று தயாரிப்பு நிறுவனம் ஆலோசனை செய்து வருவதாக நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.