ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தமிழில் மயக்கம் என்ன படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்தவர் ரிச்சா கங்கோபாத்யாய. அதன் பிறகு ஒஸ்தி படத்தில் சிம்புவுடன் நடித்தார். தமிழில் அறிமுகமாவற்கு முன்பும், அதன் பிறகும் தெலுங்கு படங்களில் நடித்தார். கடந்த 5 ஆண்டுகளாக ரிச்சா படங்கள் எதிலும் நடிக்கவில்லை.
இந்தநிலையில் ரிச்சா ஒரு டுவிட்டர் பதிவு வெளியிட்டிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது: எனக்கு 90 வயது ஆகும்போது கூட என்னிடம் 'உங்களின் அடுத்த படம் எப்போது?' என்ற கேள்வி கேட்கப்படும் என்ற யதார்த்தத்தை ஏற்றுக்கொண்டிருக்கிறேன். அதேவேளையில், திரைப்படப் பிரவேசம் என்பது என்னைப் பொறுத்தவரை ஒரு குறுகிய காலவீச்சு. அதற்குள் மீண்டும் திரும்ப நான் விரும்பவில்லை. கடந்துவிட்டேன். என பதிவிட்டிருக்கிறார்.