தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
இயக்குனர் சுசீந்திரன் ஒரே நேரத்தில் 3 படங்களை இயக்கி வருகிறார். ஜீனியஸ். சாம்பியன், ஏஞ்சலினா ஆகிய படங்கள் அவை. இதில் ஜீனியஸ் படம் ரிலீசுக்கு தயாராகி விட்டது. வருகிற 26ந் தேதி வெளிவருகிறது. அடுத்த படமான சாம்பியன் படப்பிடிப்புகள் நிறைவடைந்து நேற்று டப்பிங் பணிகள் துவங்கியது.
வெண்ணிலா கபடி குழுவில் கபடி விளையாட்டையும், ஜீவாவில் கிரிகெட் விளையாட்டையும் கதை களமாக வைத்திருந்த சுசீந்திரன், இதில் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்துள்ளார். இதில் புதுமுகம் ரோஷன் , மிர்னாலினி நாயகன் நாயகியாக நடித்துள்ளார்கள்.
இவர்களோடு விஷாலின் தந்தை ஜி.கே ரெட்டி , அஞ்சாதே நரேன் , ஜெயப்ரகாஷ் , ஆர்.கே. சுரேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்துக்கு இசை அரோல் குரொலி , ஒளிப்பதிவு சுஜித் சாரங் , களஞ்சியம் சினி ஆர்ட்ஸ் சார்பாக கே. ராகவி தயாரிக்கிறார்.