ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' |
லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடித்துள்ள சண்டக்கோழி-2 படத்தில் அதிரடியான வில்லியாக நடித்திருப்பவர் வரலட்சுமி. இதையடுத்து, விஜய்யின் சர்கார் உள்பட பல படங்களில் நடித்து வருகிறார். அதோடு, உன்னை அறிந்தால் என்ற டிவி நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்குகிறார்.
இந்த நிலையில், தொலைக்காட்சி ஒன்றுக்கு வரலட்சுமி அளித்த பேட்டியின்போது, விஷாலுக்கு எப்போது திருமணம் என்றொரு கேள்வி அவரிடம் கேட்கப்பட்டபோது, அதற்கு அவர், இந்த கேள்விக்கு நானும் அவரிடம் பலமுறை கேட்டு விட்டேன். இப்படி காலம் கடத்தினால் பின்னர் யாரும் பெண் தரமாட்டார்கள் என்றும் சொல்லி பார்த்து விட்டேன். ஆனால் நடிகர் சங்க கட்டடம் கட்டிய பிறகு தான் கல்யாணம் என்பதில் உறுதியாக இருக்கிறார்.
சினிமாவில் விஷாலுக்கு நான் எப்போதுமே வில்லி. நிஜ வாழ்க்கையில் நல்ல தோழி என கூறியுள்ளார்.