இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, த்ரிஷா நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் விண்ணைத்தாண்டி வருவாயா. இப்படத்திற்கு ரஹ்மான் இசையமைத்து இருந்தார். தொடர்ந்து இந்த மூவர் கூட்டணி அச்சம் என்பது மடைமையடா படத்திலும் இணைந்தனர். அந்தப்படமும் வெற்றி பெற்றது.
இந்நிலையில் இவர்கள் மூவரும் மீண்டும் ஒரு படத்தில் இணைய உள்ளனர். இது விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
அதேசமயம் இந்தப்படம் விண்ணைத்தாண்டி வருவாயா 2 இல்லை என்றும், அதிரடி ஆக்ஷன் நிறைந்த கமர்ஷியல் படமாக உருவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
தற்போது சிம்பு, சுந்தர் சியின் படத்தில் நடிக்கிறார். அதை முடித்ததும் வெங்கட் பிரபுவின் பார்டியில் நடிக்கிறார். இந்த படங்களை முடித்த பிறகு கவுதம் மேனன் படத்தில் நடிப்பார் என தெரிகிறது.