தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படம் என்ஜிகே. ரகுல் பிரீத் சிங், சாய் பல்லவி நாயகிகளாக நடித்து வரும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். தீபாவளிக்கு திரைக்கு வர வேண்டிய இப்படம் தாமதமானதால் சூர்யாவின் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
படம் பற்றிய அப்டேட்டை தருமாறு ரசிகர்கள் தொடர்ந்து நச்சரித்து வண்ணம் உள்ளனர். இந்நிலையில, என்ஜிகே படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு டுவிட்டரில் படம் குறித்த தகவல் வெளியிட்டிருக்கிறார்.
அதில், சூர்யா, கேவி ஆனந்த் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். அதை முடித்து திரும்பியதும் என்ஜிகே படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு நவம்பரில் ஆரம்பிக்கிறோம். படப்பிடிப்பு முடிந்த பிறகு ரிலீஸ் தேதி குறித்து அறிவிக்கப்படும். இந்த படத்தை ஒரு சிறந்த படைப்பாக உங்கள் முன்பு வைக்க ஆவலாக உள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.