டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி கூறியுள்ள பாலியல் குற்றச்சாட்டுக்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் சுசி லீக்ஸில், சின்மயி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் கேட்டு வருகின்றனர்.
இதுகுறித்து ஒரு வீடியோவில் பதில் கொடுத்துள்ளார் சின்மயி. அந்த வீடியோவில், கடந்த ஒன்றரை ஆண்டுகளாகவே தமிழ் சமுதாயத்தில் உள்ள கொச்சை மனம் கொண்ட சிலர், சுசித்ராவின் குற்றச்சாட்டுகளுக்கு பதில் கூறுமாறு தமிழில் உள்ள அனைத்து கொச்சையான வார்த்தைகளாலும் என்னிடம் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
அந்த மாதிரி நபர்களுக்கு நான் சொல்லிக்கொள்ள விரும்புவது, அந்த குற்றச்சாட்டுகளை நான் அப்போதே மறுத்திருந்தேன். அதோடு, சுசித்திரா மனநிலை சரியில்லாமல் அப்படி பேசுவதாக அவரின் கணவர் கார்த்திக் தெரிவித்திருந்தார்.
அதுகுறித்து வருத்தம் தெரிவித்து இமெயில் ஒன்றையும் அனுப்பியிருந்தார் சுசித்ரா. அந்த மெயிலை பகிர்ந்து நான் குற்றமற்றவள் என்பதை வெளிப்படுத்த ஓரிரு நிமிடங்களே போதும். ஆனால் தனிப்பட்ட முறையில் வந்த மெயில் என்பதால் அதை நான் வெளியிடவில்லை.
அதோடு, அப்போது சின்மயி மீது சுசித்ரா கூறிய குற்றச்சாட்டு உண்மையில்லை. மனநிலை சரியில்லாதபோது சுசித்ரா கூறிய குற்றச்சாட்டுக்கள் அவை என்று சுசித்ராவின் கணவர் கார்த்திக் ஒரு டுவிட் வெளியிட்டிருந்தார். அதை நானும் எனது டுவிட்டரில் பகிர்ந்தேன்.
எனது தொழில் முன்னேற நான் என்னென்ன அட்ஜஸ்ட்மென்ட் செய்தேன் என கேள்வி எழுப்பிவரும் தமிழ் உள்ளங்களுக்கு நான் சொல்லும் பதில் இதுவேயாகும். உண்மை ஒருநாள் கண்டிப்பாக வெளியே வரும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. என் நம்பிக்கை வீண்போகவில்லை என்றும் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார் பாடகி சின்மயி.