ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
யாஷ் ராஜ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் பிரம்மாண்டமான சரித்திரப் படம் தான் தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான். இந்த படத்திற்காக அமிதாப்பச்சன் மற்றும் ஆமிர் கான் ஆகியோர் முதன்முதலாக ஒன்றாக இணைந்து நடிக்கின்றனர்,இது அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டு வரும் ஒரு முக்கிய படம் .இந்த படத்தின் வாஸ் மாலே ( VASH MALLE ) என்ற பாடலுக்கு இருவரும் இணைந்து நடனம் ஆடியது குறிப்பிடத்தக்கது.
இந்த பாடலுக்கு நடனக்கலை பணியை பிரபுதேவா மேற்கொண்டார். பிரபுதேவா ஒரு சிறப்பான நடன கலைஞர். இந்த பாடலுக்கு சிறப்பான முறையில் நடனக்கலையை மேற்கொண்டுள்ளார். அமிதாப்பச்சன் மற்றும் ஆமிர் கான் இணைந்து ஆடிய இந்த பாடல் பல காலத்திற்கு நின்று பேசும்..
பாலிவுட்டின் முக்கிய உச்ச நட்சத்திரங்களான அமிதாப் பச்சன் மற்றும் ஆமிர் கான் ஆகியோர் முதன்முதலாக இந்த படத்தில் இணைந்துள்ளனர் .இணைந்து ஒரு பாடலுக்கு நடனமும் ஆடியுள்ளனர். இவர்கள் ஆடிய இந்த நடனக் கலை வீடியோ தற்போது தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான் படத்தில் இடம் பெற்று இருப்பது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது என இயக்குனர் விஜய் கிருஷ்ணா ஆச்சார்யா தெரிவித்துள்ளார்.
திவ்யா குமார் மற்றும் நகேஷ் ஆஷிஷ் இப்பாடலை பாடியுள்ளனர். பிரபலமான பாடலாசிரியர் மதன் கார்க்கி இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார். இந்த அருமையான பாடலுக்கு இசையமைப்பாளர் அஜய் அதுல் இசையமைத்துள்ளார்.
மேலும் இந்த படத்தில் கத்ரீனா கைப் மற்றும் பாத்திமா சனா சேக் ஆகியோர் நடித்துள்ளனர் ,இப்படம் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமையும் .யாஷ் ராஜ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் நவம்பர் 8 ஆம் தேதி ஹிந்தி ,தமிழ்,தெலுங்கு மொழிகளில் ரிலீஸ் ஆக உள்ளது.