அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
பிரபல பாடகி சின்மயி, பாடலாசிரியர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டுக்களை நேரடியாகவே கூறியிருந்தார். இதனால் தமிழ் திரையுலகமே அதிர்ச்சி அடைந்திருந்தது. இந்நிலையில் சின்மயிக்கு நடிகர், நடிகைகள் பலரும் தங்களின் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தன் மீதான குற்றச்சாட்டுக்கள் குறித்து விளக்கம் அளித்து வைரமுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், என் மீது கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் முழுக்க, முழுக்க பொய்யானது. உள்நோக்கத்துடன் சொல்லப்படுபவை. பாலியல் குற்றம் சொல்பவர்கள், உண்மையிருந்தால் வழக்கு தொடரலாம். அப்படி தொடர்ந்தால் அவற்றை சந்திக்க தயாராக உள்ளேன்.
கடந்த ஒரு வாரமாக மூத்த வழக்கறிஞர்களுடன் ஆழ்ந்து ஆலோசித்து வந்தேன். அசைக்க முடியாத ஆதாரங்களை தொகுத்து திரட்டி வைத்துள்ளேன். நான் நல்லவா? கெட்டவனா என்பதை இப்போதும் யாரும் முடிவு செய்ய வேண்டாம். அதனை கோர்ட் முடிவு செய்யட்டும். இவ்வாறு அவர் பேசி உள்ளார்.
வைரமுத்து வீடியோ வெளியிட்ட சிறிது நேரத்தில் பாடகி சின்மயி தனது டுவிட்டர் பக்கத்தில் அதற்கு பதிலளித்தார். அதில், வைரமுத்துவுக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.