ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பிரபல பாலிவுட் நடிகை அமைரா தஸ்தூர் குங்பூ யோகா என்ற ஹாலிவுட் படத்திலும் நடித்தார். அமைரா தஸ்தூர் அளித்த பேட்டி ஒன்றில் தென்னிந்திய நடிகர் ஒருவர் எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என்று தெரிவித்துள்ளர். அவர் கூறியிருப்பதாவது:
தென்னிந்திய படம் ஒன்றில் நடித்தபோது அதில் என்னுடன் நடித்த நடிகர் என்னைத் தவறான முறையில் கட்டியணைத்தார். இதை நான் உணர்ந்து உடனடியாக இயக்குனரிடம் புகார் செய்த போது அவர் அந்த நடிகருக்கு ஆதரவாக பேசினார். இதையெல்லாம் கண்டு கொள்ளாதீர்கள் என்று அறிவுரை சொன்னார். பல காட்சிகளை வேண்டும் என்றே அதிக நேரம் எடுத்தார்.
இதனால் சில இடங்களில் அந்த நடிகரை உதாசீனப்படுத்தினேன். அதற்கு அந்த இயக்குனர் நடிகரிடம் மன்னிப்பு கேட்கச் சொன்னார். என்னிடம் தவறாக நடந்தவர்க யார் என்று இப்போது கூற மாட்டேன், அவர்கள் இந்த துறையில் மிகவும் பலம் வாய்ந்தவர்கள். அவர்கள் எனக்கு என்ன செய்தார்கள் என்பதை ஒருநாள் நிச்சயம் சொல்வேன். என்று கூறியுள்ளார்.
அமைரா தென்னிந்திய மொழிகளில் தெலுங்கிலும், தமிழிலும் தலா 2 படங்களில் நடித்துள்ளார். அனேகன் படத்தில் தனுஷ் ஜோடியாகவும், ஓடி ஓடி உழைக்கணும் படத்தில் சந்தானம் ஜோடியாவும் நடித்தார். தெலுங்கில் மனசுக்கு நச்சண்டி படத்தில் சந்தீப் கிஷன் ஜோடியாகவும், ராஜு கடு படத்தில் ராஜ் தருண் ஜோடியாகவும் நடித்தார். இந்த 4 பேரில் அமைரா குறிப்பிடுவதை யாரை என்று தெரியவில்லை.