Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'தேவர் மகன் 2' உறுதி செய்த கமல்ஹாசன்

13 அக், 2018 - 11:22 IST
எழுத்தின் அளவு:
Kamal-confirmed-thevar-magan-2

கமல்ஹாசன் 'இந்தியன் 2' படத்திற்குப் பிறகு 'தேவர் மகன் 2' படத்தில் நடிக்க உள்ளதை உறுதி செய்துள்ளார். 'தேவர் மகன் 2' படத்தில் கமல்ஹாசன் நடிக்க உள்ளார் என்ற தகவலை நாம் எப்போதே வெளியிட்டிருந்தோம். 'இந்தியன் 2' படப்பிடிப்பு முடிந்ததும் கமல்ஹாசன் இதன் படப்பிடிப்பை ஆரம்பிக்கலாம்.

'தேவர் மகன்' படத்தின் முதல் பாகம் 1992ம் ஆண்டு வெளிவந்து மிகப் பெரும் வெற்றியைப் பெற்றது. இப்போது 26 ஆண்டுகளுக்குப் பிறகு கமல்ஹாசன் இரண்டாம் பாகத்தைத் தயாரிக்க உள்ளார். முதல் பாகத்தை மலையாள இயக்குனர் பரதன் இயக்க இளையராஜா இசையமைத்திருந்தார். அதில் இடம் பெற்ற 'போற்றிப் பாடடி பெண்ணே, இஞ்சி இடுப்பழகி' பாடல்கள் மிகப் பெரும் ஹிட்டாக அமைந்தன.

இரண்டாம் பாகத்தை யார் இயக்கப் போவது, இசையமைக்கப் போவது யார், உடன் நடிக்கப் போவது யார் என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை. கமல்ஹாசன் அடுத்து நடிக்கப் போகும் இரண்டு படங்களுமே இரண்டாம் பாகப் படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
தாணு தயாரிப்பில், வெற்றிமாறன் - தனுஷ் கூட்டணிதாணு தயாரிப்பில், வெற்றிமாறன் - தனுஷ் ... ராம்கோபால் வர்மாவின் 'லட்சுமியின் என்டிஆர்' 19ல் ஆரம்பம் ராம்கோபால் வர்மாவின் 'லட்சுமியின் ...


வாசகர் கருத்து (8)

vasumathi - Sydney,ஆஸ்திரேலியா
14 அக், 2018 - 14:37 Report Abuse
vasumathi இன்னொரு தமிழ் மண் படமாக அமையட்டும்,
Rate this:
14 அக், 2018 - 09:36 Report Abuse
பாரதன். இவர்கள் எல்லாம் அரசியல் பற்றி பரபரப்பாக பேச வைத்து சினிமா படத்தை ஓட்டி பணம் சம்பாதிப்பவர்கள். இவர் சொல்கிறார் முழுநேர அரசியல் வாதி என்று. அரசியலை சினிமாவிற்கு பயன் படுத்திக் கொள்ளும் வியாபாரிகள்.
Rate this:
Vasudevan Srinivasan - Chennai,இந்தியா
13 அக், 2018 - 19:23 Report Abuse
Vasudevan Srinivasan இசைஞானி இளையராஜா அவர்களின் இசை 'தேவர் மகன்' படத்துக்கு மிகப் பெரிய பலம்.. எனவே இரண்டாம் பாகத்திலும் நிச்சயம் இசைஞானியுடன் கமல் அவர்கள் கை கோர்ப்பார் என்று நம்புவோம்..
Rate this:
13 அக், 2018 - 15:46 Report Abuse
MuBarak Follows Rahmanism whos d sivaji sir?
Rate this:
Vasudevan Srinivasan - Chennai,இந்தியா
13 அக், 2018 - 19:19Report Abuse
Vasudevan SrinivasanAlready in first part Nadigarthilagam's Character Expired So No Need about Sivaji Sir's replacement.....
Rate this:
pradeep -  ( Posted via: Dinamalar Android App )
13 அக், 2018 - 14:18 Report Abuse
pradeep தேவர் ஜாதி ஓட்டுக்காக தேவர்மகன்-2, ஐயர் ஜாதி ஓட்டுக்காக ஔவை சண்முகி-2, enna right ah?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Sandakozhi 2
    • சண்டகோழி 2
    • நடிகர் : விஷால்
    • நடிகை : கீர்த்தி சுரேஷ் ,வரலெட்சுமி
    • இயக்குனர் :லிங்குசாமி
    Tamil New Film Yang Mang Chang
    • யங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Sandi Muni
    • சண்டி முனி
    • நடிகர் : நடராஜ் சுப்ரமணியம்
    • நடிகை : மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மில்கா செல்வகுமார்
    Tamil New Film Rajabheema
    • ராஜபீமா
    • நடிகர் : ஆரவ்
    • இயக்குனர் :நரேஷ் சம்பத்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in