தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
துப்பாக்கி படத்தை அடுத்து விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் இணைந்த படம் கத்தி. விவசாயிகள் பிரச்சினையை மையமாகக்கொண்டு உருவான அந்த படமும் அவர்களுக்கு வெற்றியை கொடுத்தது. அப்படம் 2014ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியானது. அதேபோல் இப்போது அவர்கள் மீண்டும் இணைந்துள்ள சர்கார் படம் 2018ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியாகிறது.
கத்தி படத்தின் டீசர் 2014ம் ஆண்டு அக்டோபர் 18-ந்தேதி வெளியானது. தற்போது தயாராகியுள்ள சர்கார் படத்தின் டீசர் அக்டோபர் 19-ம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆக, கத்தி, சர்கார் படங்களின் டீசர் மற்றும் பட ரிலீஸ் இரண்டுமே ஒரே மாதிரியாக அமைந்துள்ளன.