Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

வைரமுத்துவால் பல பாடகிகள் பாதிக்கப்பட்டனர் : சின்மயி

12 அக், 2018 - 15:32 IST
எழுத்தின் அளவு:
More-singers-suffered-by-Vairamuthu-says-Chinmayi

பெண்கள் பாலியல் ரீதியாக தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டதை வெளிக்கொண்டு வரும் விதமாக உலகம் முழுக்க #MeeToo என்ற ஹேஷ்டேக் பிரபலமாது. இந்தியாவிலும் இது பிரபலமாக பாலிவுட், கோலிவுட், அரசியல்வாதிகள், விளையாட்டு வீரர்கள் என பல பிரபலங்கள் சிக்கி வருகின்றனர்.

தமிழ் சினிமாவில், கவிஞர் வைரமுத்து, தனக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தார் என பாடகி சின்மயி சமூகவலைதளத்தில் பதிவிட, இந்த பிரச்னை விவகாரமானது. மேலும், நடிகர்கள் ராதாரவி, நடன இயக்குநர் கல்யாண் உள்ளிட்ட பலரது பெயர்களும் இந்த விவகாரத்தில் சிக்கினர்.

வைரமுத்துவோ, தன் மீது அவதூறு பரப்புகின்றனர். தொடர்ச்சியாக நான் அவமானப்படுத்தப்பட்டு வருகிறேன். உண்மைக்கு புறம்பான எதையும் பொருட்படுத்துவது கிடையாது. உண்மையை காலம் சொல்லும் என டுவிட்டரில் விளக்கம் அளித்தார்.

வைரமுத்துவின் இந்த பதிவை குறிப்பிட்ட சின்மயி, அவர் ஒரு பொய்யர் என கூறினார். மேலும் தொடர்ந்து பல பெண்கள் வைரமுத்துவால் பாலியல் ரீதியாக பிரச்னைக்கு உள்ளானதை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில் பேஸ்புக்கில் சின்மயி, நேரலையில் பேசினார். அதில், வைரமுத்து தொடர்பாக நான் கூறிய குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மை. இது அந்த நிகழ்ச்சி தொடர்பான அனைவருக்குமே தெரியும். இருந்தும் ஏன் மறைக்க முயற்சிக்கிறார்கள் என்று தெரியவில்லை. ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள பெண்களிடம் கேட்டால் தங்களுக்கு நிகழ்ந்த பிரச்னைகளை கூறுவார்கள்.

என் திருமணத்திற்கு வைரமுத்துவை அழைத்தோம். எல்லோரையும் அழைத்து அவரை மட்டும் அழைக்கவில்லை என்றால் அதற்கான காரணத்தை சொல்ல நேரிடும். MeeToo விவகாரத்தில் ஆண்களும் தங்களுக்கு ஏற்பட்ட இன்னல்கள் குறித்து பேச தொடங்கி உள்ளனர்.

இப்போது தான் பாலியல் தொல்லைகள் பற்றி அதிகமாக பேசத் தொடங்கியிருக்கிறோம். நிலைமை மாறிக்கொண்டே வருவதால் பெண்கள் தங்கள் பிரச்சினைகளை வெளிப்படுத்த தொடங்கி இருக்கிறார்கள். என்னை அரசியல் கட்சியுடன் இணைத்து பேசுகிறார்கள். நான் அரசியல் கட்சி சார்பற்றவள்.

வைரமுத்துவால் இன்னும் சில பாடகிகளும் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் அதை சொல்ல தயங்குகிறார்கள். என் நடத்தை பற்றி பேசுகிறார்கள், நான் ஒழுக்கமானவள். என் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு தெரியும்.

வைரமுத்து மீதான குற்றச்சாட்டில் உறுதியாக இருக்கிறேன். நான் யாருக்கும் பயப்பட மாட்டேன். பாலியல் துன்புறுத்தல் செய்தவர்கள் தான் வெட்கப்பட வேண்டும்; நான் வெட்கப்பட மாட்டேன். MeeToo மூலம் ஏராளமான குற்றச்சாட்டுகள் வெளி வருகின்றன.

இவ்வாறு சின்மயி கூறியுள்ளார்.


சின்மயி பேஸ்புக்கில் நேரலையில் பேசிய வீடியோ லிங்க் இதோ : https://www.facebook.com/ChinmayiSripada/videos/162673284674625/Advertisement
கருத்துகள் (87) கருத்தைப் பதிவு செய்ய
சில்லு கருப்பட்டியில் 4 கதைகள்சில்லு கருப்பட்டியில் 4 கதைகள் சின்மயிக்கு ஆதரவாக களமிறங்கிய ஸ்வர்ணமால்யா சின்மயிக்கு ஆதரவாக களமிறங்கிய ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (87)

UNMAI VILAMBI - TAMIL NADU,இந்தியா
17 அக், 2018 - 13:50 Report Abuse
UNMAI VILAMBI Metoo-வெல்லாம் கிடையாது.. உருட்டுக்கட்டைதான் லோன் கேட்டதற்குப் பாலியல் தொல்லை: வங்கி மேலாளரை புரட்டி எடுத்த பெண் இது தான் நம் குடும்பத்து பெண் செய்தது இவளாவது தனியே ஆனால் அன்று தாயும் மகளும் புரட்டி இருந்தால் பாராட்டலாம் நல்ல பணம் புரட்டிவிட்டு இப்போ ...
Rate this:
Murthy - Bangalore,இந்தியா
14 அக், 2018 - 14:54 Report Abuse
Murthy .......இனொரு ஸ்ரீரெட்டி.....
Rate this:
Ramakrishnan Natesan - BANGALORE ,இந்தியா
13 அக், 2018 - 19:03 Report Abuse
Ramakrishnan Natesan இவர் வைரம் பாய்ந்த நெஞ்சம் கொண்டவர்
Rate this:
ஜாம்பஜார் ஜக்கு - Chennai,இந்தியா
13 அக், 2018 - 13:39 Report Abuse
ஜாம்பஜார் ஜக்கு "நான் கைய பிடிச்சு இழுக்கல" அப்படீன்னு சொல்ல மாட்டேங்க்ராறு....ஆண்டாள் பிரச்சினைல இவருக்கு சப்போர்ட்டா இருக்கற க்ரூப்பு பின்னாலே ஒளியறாரு...அங்க தான் எனக்கு சந்தேகம்.
Rate this:
Ganapathy - Bangalore,இந்தியா
13 அக், 2018 - 13:29 Report Abuse
Ganapathy சின்மயி சொல்வது சரியை இருக்கலாம் அனல் பல வருடும் சென்று இப்போது கூப்பாடு போடுவது ஏன் .. திரு ராகவன் திருச்சி கூறிடியது தான் சரி, அப்போதே இதை வெளிப்படையாக கண்டித்து இருந்தால் , உங்களை போல மற்ற பெண்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுஇருக்காது ..
Rate this:
மேலும் 82 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Viswasam
  • விஸ்வாசம்
  • நடிகர் : அஜித் குமார்
  • நடிகை : நயன்தாரா
  • இயக்குனர் :சிவா
  Tamil New Film Neeya 2
  • நீயா 2
  • நடிகர் : ஜெய்
  • நடிகை : வரலெட்சுமி ,கேத்ரின் தெரஸா
  • இயக்குனர் :எல்.சுரேஷ்
  Tamil New Film Monster
  • மான்ஸ்டர்
  • நடிகர் : எஸ்.ஜே.சூர்யா
  • நடிகை : பிரியா பவானி சங்கர்
  • இயக்குனர் :நெல்சன் வெங்கடேசன்
  Tamil New Film Ayogya
  • அயோக்யா
  • நடிகர் : விஷால்
  • நடிகை : ராஷி கண்ணா
  • இயக்குனர் :வெங்கட் மோகன்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in