Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஜப்பான் இந்திய மேளாவில் ரஜினி ரசிகர்கள்

12 அக், 2018 - 13:43 IST
எழுத்தின் அளவு:

தமிழ்த் சினிமாவின் உச்ச நடிகரான ரஜினிகாந்திற்கு ஜப்பான் நாட்டிலும் எண்ணற்ற ரசிகர்கள் இருக்கிறார்கள். 'முத்து' படம் அங்கு வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்றது. அதன்பின் ரஜினிகாந்த் படங்களுக்கு ஜப்பான் நாட்டிலும் தனி வரவேற்பு இருந்து வருகிறது. இன்றைய ஜப்பான் இளம் ரசிகர்களும் ரஜினிகாந்த்தையும், அவருடைய படங்களையும் கொண்டாடி வருகிறார்கள்.

ஜப்பான் நாட்டில் உள்ள கோபே என்ற நகரத்தில் கடந்த 6,7,8 ஆகிய நாட்களில் இந்திய மேளா 2018 நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் ஜப்பான் நாட்டில் உள்ள ரஜினிகாந்த் ரசிகர் மன்றத்தினரும் கலந்து கொண்டனர். அங்கு ரஜினிகாந்த் பாடல்களைப் பாடியும், அவரது பாடல்களுக்கு நடனமாடியும் விழாவை அவர்கள் சிறப்பித்தார்கள்.

ரஜினி மக்கள் மன்றம், ஜப்பான் அந்த நிகழ்வை நிர்வகித்தது. அங்கு ரஜினிகாந்த் புகைப்படங்கள், போஸ்டர்கள் அடங்கிய ஸ்டால் ஒன்றையும் நடத்தினார்கள். அதில் வசூலாகும் தொகையை வைத்து ஜப்பானில் தமிழ்த் திரைப்பட திரையிடல் மற்றும் தமிழர்களுடன் பரிமாற்ற நிகழ்வுகள் ஆகியவற்றிற்கான ஒரு நிதியாக அதைப் பயன்படுத்தப் போவதாகவும் அறிவித்துள்ளார்கள்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் மீது குற்றம் சொல்லும் நிகிஷா பட்டேல்கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் மீது ... ஆண் தேவதைக்கு வந்த கடைசி நேர சிக்கல் ஆண் தேவதைக்கு வந்த கடைசி நேர சிக்கல்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

இந்தியன் kumar - chennai,இந்தியா
19 அக், 2018 - 15:27 Report Abuse
இந்தியன் kumar எல்லாத்துக்கும் இறைவன் அருள் வேண்டும் , சூப்பர் ஸ்டார் இறைவன் அருள் உள்ளவர்.
Rate this:
JMK - Madurai,இந்தியா
12 அக், 2018 - 14:43 Report Abuse
JMK உலகம் விரும்பும் உன்னத நடிகரோ ?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Viswasam
    • விஸ்வாசம்
    • நடிகர் : அஜித் குமார்
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :சிவா
    Tamil New Film Neeya 2
    • நீயா 2
    • நடிகர் : ஜெய்
    • நடிகை : வரலெட்சுமி ,கேத்ரின் தெரஸா
    • இயக்குனர் :எல்.சுரேஷ்
    Tamil New Film Monster
    • மான்ஸ்டர்
    • நடிகர் : எஸ்.ஜே.சூர்யா
    • நடிகை : பிரியா பவானி சங்கர்
    • இயக்குனர் :நெல்சன் வெங்கடேசன்
    Tamil New Film Ayogya
    • அயோக்யா
    • நடிகர் : விஷால்
    • நடிகை : ராஷி கண்ணா
    • இயக்குனர் :வெங்கட் மோகன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in