Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சிவகார்த்திகேயனுடன் நடித்ததற்காக வருத்தப்படவில்லை

11 அக், 2018 - 23:43 IST
எழுத்தின் அளவு:
I-do-not-regret-having-acted-with-Sivakarthikeyan

சில ஆண்டுகளுக்கு முன் வரை, கோலிவுட்டில் கொடிகட்டி பறந்த ஹன்சிகா, சமீபகாலமாக வாய்ப்பில்லாமல் இருந்தார். தற்போதுதுப்பாக்கி முனை, 100, மஹா ஆகிய படங்களில் நடித்து வரும் அவர், மீண்டும், 'பிசி'யான நடிகையாகி விட்டார். அவருடன் ஒரு சந்திப்பு:


குறைந்த வயதிலேயே, 50வது படத்தை தொட்டு விட்டீர்களே?என் சினிமா வாழ்க்கையில், பல வெற்றி, தோல்விகளை பார்த்துள்ளேன். நிறைய அனுபவங்கள் கிடைத்துள்ளன. குழந்தை நட்சத்திரமாக பல ஹிந்தி படங்களில் நடித்துள்ளேன். இப்போது, தமிழ் படங்களுக்கு அதிக முக்கியத்துவம் தருகிறேன். என், 50வது படமான மஹா, ரொம்ப
வித்தியாசமான படம். இப்படத்திற்காக நிறைய பயிற்சி எடுத்துள்ளேன்.


இதுவரை நடித்ததில் பிடித்த படம்?


ரோமியோ ஜூலியட் மிகவும் பிடிக்கும். அரண்மனை படமும் பிடிக்கும்.


சமீபத்தில் பார்த்து ரசித்த படம்?


கீர்த்தி சுரேஷ் நடித்த, மகா நடிகை படம் பார்தேன். கீர்த்தி மிகவும் அருமையாக நடித்திருந்தார்.


தத்தெடுத்த குழந்தைகளுக்காக விடுதி கட்டப்போகிறீர்களா?


கடந்த, ஒன்றரை ஆண்டுகளாக யாரையும் தத்தெடுக்கவில்லை. இதுவரை, 31 குழந்தைகளை பராமரித்து வருகிறேன். அவர்களுக்காக ஒரு விடுதி கட்ட வேண்டும். இதற்காக நான் வரைந்த ஓவியங்களை காட்சிக்கு வைக்கப் போகிறேன்.


சின்ன குஷ்பு போல் இருந்தீர்கள்... திடீரென மெலிந்து விட்டீர்களே?


என் உடல் எடையில், 5 கிலோ தான் குறைந்துள்ளது. இதற்காக, பெரிய அளவில் உடற்பயிற்சி எல்லாம் இல்லை. விரும்பியதை சாப்பிடுவேன். யோகா செய்வதோடு, எனக்கு பிடித்த
விளையாட்டை விளையாடுவேன்.


அஜித்துடன் நடிக்காதது வருத்தமா?


ஆண்டுக்கு நான்கு படங்கள் மட்டுமே நடிக்க வேண்டும் என முடிவு செய்துள்ளேன். இதுவரை அஜித்துடன் நடிக்காதது வருத்தம் தான். பெரிய நடிகர்களுடன் ஜோடியாக நடித்த போது, மான் கராத்தே படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடித்ததற்காக வருத்தப்படவில்லை. அதை சரியான முடிவாகவே பார்க்கிறேன்.


பட தயாரிப்பில் ஆர்வம் உள்ளதா?


நான், 50 படத்தில் நடித்தாலும், ரொம்ப சின்ன பெண் தான். இன்னும் நிறைய படங்கள் நடிக்க
வேண்டும். 70 வயதாகும் போது, படங்கள் தயாரிப்பதை பற்றி யோசிப்போம்.


எதிர்காலத்தில் அரசியல் ஆர்வம்?


படித்தது அரசியல் அறிவியல் என்றாலும், அரசியலில் எனக்கு ஆர்வம் இல்லை. நான் பிறந்தது வட மாநிலமாக இருந்தாலும், தென் மாநில பெண்ணாகவே உணர்கிறேன்.


திருமணம் எப்போது?


நீங்கள் கேட்பது சரியாக காதில் விழவில்லை.

Advertisement
நம்பிக்கை தானே எல்லாம்!நம்பிக்கை தானே எல்லாம்! விமர்சனங்களை ஏற்பேன் : விஜய் தேவரகொண்டா விமர்சனங்களை ஏற்பேன் : விஜய் ...


வாசகர் கருத்து (3)

sam - Bangalore,இந்தியா
17 அக், 2018 - 08:40 Report Abuse
sam She adopted many orphan kids and helping them.
Rate this:
Vasudevan Srinivasan - Chennai,இந்தியா
12 அக், 2018 - 18:57 Report Abuse
Vasudevan Srinivasan சிறந்த நடிகை ஹன்சிகா மேடம்.. அவர் செய்யும் புண்ணியம் அவருக்கு நல்ல வாழ்வை தரும்..
Rate this:
pandian - coimbatore,இந்தியா
12 அக், 2018 - 06:35 Report Abuse
pandian she is super actress. so many film she act in bikini dress. please avoid half dress. why so many problem will be creating actress wearing dress is making trouble in INDIAN women. please every actress should avoid bikini dress.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Sandakozhi 2
  • சண்டகோழி 2
  • நடிகர் : விஷால்
  • நடிகை : கீர்த்தி சுரேஷ் ,வரலெட்சுமி
  • இயக்குனர் :லிங்குசாமி
  Tamil New Film Yang Mang Chang
  • யங் மங் சங்
  • நடிகர் : பிரபுதேவா
  • நடிகை : லட்சுமி மேனன்
  • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
  Tamil New Film Sandi Muni
  • சண்டி முனி
  • நடிகர் : நடராஜ் சுப்ரமணியம்
  • நடிகை : மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மில்கா செல்வகுமார்
  Tamil New Film Rajabheema
  • ராஜபீமா
  • நடிகர் : ஆரவ்
  • இயக்குனர் :நரேஷ் சம்பத்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in