மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
சிரஞ்சீவியுடன் விஜய் சேதுபதி இணைந்து நடிக்கும் படம் சைரா நரசிம்ம ரெட்டி. சுதந்திர போராட்ட காலத்து கதையில் உருவாகும் இந்த படத்தில் சிரஞ்சீவிக்கு உதவி செய்யும் ஒபாயா என்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இந்த படத்தின் போர்க்கள காட்சியொன்று ஜார்ஜியாவில் படமாகிறது. சைரா நரசிம்ம ரெட்டி படைக்கும், கிழக்கு இந்திய கம்பெனி படைக்குமிடையே நடக்கும் போர் காட்சி அது. இந்த காட்சியில் 2300 துணை நடிகர்கள் நடிக்கிறார்கள்.
ராஜ மவுலியின் பாகுபலி படத்தில் இடம் பெற்ற போர்க்கள காட்சி போன்று இந்த காட்சியும் பிரமாண்டமாக படமாக்கப்படுகிறது. இந்த போர்க்காட்சியை ஸ்பைடர் கேமராக்களை வைத்து ரத்னகுமார் படமாக்குகிறார்கள். இந்த காட்சியில் சிரஞ்சீவியுடன் விஜய் சேதுபதியும் இணைந்து நடிக்கிறார்.