Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தீபாவளி போட்டியில் 4 படங்கள்

11 அக், 2018 - 12:21 IST
எழுத்தின் அளவு:
4-movies-competitive-in-Diwali-race

தீபாவளிக்கு இன்னும் ஒரு மாதத்திற்கும் குறைவான நாட்களே உள்ளன. இந்த வருட தீபாவளிக்கு “சர்கார், திமிரு புடிச்சவன், எனை நோக்கி பாயும் தோட்டா, பில்லா பாண்டி” ஆகிய படங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் நடித்து இதற்கு முன்பு வெளிவந்த 'மெர்சல்' படம் அரசியல் வட்டாரங்களில் ஒரு சர்ச்சையை ஏற்படுத்தி அந்த பரபரப்பிலேயே வெற்றி பெற்றது. இப்போது தயாராகியுள்ள 'சர்கார்' படம் அரசியல் படம் என்று படக்குழுவினரே அறிவித்துவிட்டார்கள். அதனால், 'சர்சகார்' ஏதாவதொரு சர்ச்சையை உருவாக்கி அதில் ஓடிவிடவும் வாய்ப்புகள் அதிகம்.

அதே சமயம், 'சர்கார்' படத்துக்குப் போட்டியாக தனுஷ், மேகா ஆகாஷ் நடித்துள்ள 'எனை நோக்கி பாயும் தோட்டா' படமும், விஜய் ஆண்டனி, நிவேதா பெத்துராஜ் நடித்துள்ள 'திமிரு புடிச்சவன்' படமும், ஆர்.கே.சுரேஷ், இந்துஜா, சாந்தினி நடித்துள்ள 'பில்லா பாண்டி' படமும் வெளியாக உள்ளன. இதில் தனுஷ் படம் மட்டுமே இன்னும் தீபாவளிக்கு வருவதில் உறுதி செய்யப்படவில்லை. மற்ற படங்கள் ஏற்கெனவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டன.

'சர்கார்' படத்தின் வெளியீட்டில் ஏதாவது கட்டுப்பாடு விதிக்கப்பட்டால் மட்டுமே மற்ற படங்களை வெளியிட தியேட்டர்கள் கிடைக்கும். இல்லையென்றால் தமிழ்நாட்டில் உள்ள சுமார் 1000 தியேட்டர்களில் 800 தியேட்டர்களை 'சர்கார்' படமே ஆக்கிரமித்துக் கொள்ளும் என்கிறார்கள்.

Advertisement
வட சென்னை 2-க்கு முன் ஒரு படம்வட சென்னை 2-க்கு முன் ஒரு படம் சின்மயிக்கு பெருகும் ஆதரவு சின்மயிக்கு பெருகும் ஆதரவு


வாசகர் கருத்து (7)

Htanirdab S K - Hyderabad,இந்தியா
11 அக், 2018 - 16:53 Report Abuse
Htanirdab S K சன் நிறுவனம் பாதி அரங்குகள் சொந்தம் ..மீதி அரங்குகளையும் மிரட்டியே வெளியிட்டு விடுவார்கள் .. .இதில் பாவாடை விஜய் வேறு .. அதனால் கட்டாயம் இந்த படத்தை தான் ஓட்ட வேண்டும் இல்லையேல் கொல்லவும் தயங்க மாட்டார்கள்
Rate this:
11 அக், 2018 - 15:00 Report Abuse
AnandhKumar dinamalar mela eruntha nambika pocha one side review tha poduringa
Rate this:
suresh - chennai,இந்தியா
11 அக், 2018 - 12:48 Report Abuse
suresh அரசியல் விளம்பரம் விஜய் கிட்ட தான் கத்துக்கணும் படம் ரிலீஸ் முன்னாடி பேசுவாரு ரிலீஸ் ஆனதும் அடுத்த படம் வரும் வரை பேசமாட்டாரு இது தான் விஜய்
Rate this:
Kumar - Tbilisi,தெற்கு ஜார்ஜியா
11 அக், 2018 - 15:33Report Abuse
KumarRajiniyai pola....
Rate this:
vasumathi - Sydney,ஆஸ்திரேலியா
11 அக், 2018 - 12:40 Report Abuse
vasumathi கடுமையான புயல் மழையில், சினிமா ஓடுமா என்பது அடுத்த கேள்வி..
Rate this:
11 அக், 2018 - 12:29 Report Abuse
Parthiban Samy Enga eppo parthalum Sarkar and Vijayku opposite ave news podareenga...
Rate this:
Karthik - Tirupur,இந்தியா
11 அக், 2018 - 16:42Report Abuse
Karthikஇவிங்களும் விஜய பத்தி பேசி பாப்புலர் ஆகுலானு பார்க்கறாங்க....
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Yang Mang Chang
  • யங் மங் சங்
  • நடிகர் : பிரபுதேவா
  • நடிகை : லட்சுமி மேனன்
  • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
  Tamil New Film Sandi Muni
  • சண்டி முனி
  • நடிகர் : நடராஜ் சுப்ரமணியம்
  • நடிகை : மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மில்கா செல்வகுமார்
  Tamil New Film Rajabheema
  • ராஜபீமா
  • நடிகர் : ஆரவ்
  • இயக்குனர் :நரேஷ் சம்பத்
  Tamil New Film Billa Pandi
  • பில்லா பாண்டி
  • நடிகர் : ஆர் கே சுரேஷ்
  • நடிகை : சாந்தினி
  • இயக்குனர் :சரவண சக்தி
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in