ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஆந்திரா மாநில முன்னாள் முதல்வரும், நடிகருமான என்டிஆர் வாழ்க்கை வரலாறு 'என்டிஆர்' என்ற பெயரில் படமாக்கப்பட்டு வருகிறது. இப்படத்தின் சில போஸ்டர்கள் ஏற்கெனவே வெளியிடப்பட்டு பெரிய வரவேற்பைப் பெற்றன. என்டிஆர் தோற்றத்தில் பாலகிருஷ்ணா, சந்திரபாபு நாயுடு தோற்றத்தில் ராணா டகுபட்டி, ஏ நாகேஸ்வரராவ் தோற்றத்தில் சுமந்த் ஆகியோர் இடம் பெற்ற போஸ்டர்கள் உருவ ஒற்றுமை காரணமாக பெரிதும் ரசிக்கப்பட்டன. பொருத்தமான கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான நடிகர்களைத் தேர்வு செய்தத்தாக படக்குழுவினருக்குப் பாராட்டுக்கள் கிடைத்தன.
ஆனால், அந்த மொத்த பெருமையையும் இன்று வெளியிடப்பட்ட ஸ்ரீதேவி போஸ்டர் குலைத்துவிட்டது. 'என்டிஆர்' படத்தில் நடிகை ஸ்ரீதேவி கதாபாத்திரத்தில் ரகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார். இன்று ரகுலின் பிறந்த நாளை முன்னிட்டு ஸ்ரீதேவி தோற்றத்தில் உள்ள அவரின் போஸ்டர் வெளியிடப்பட்டது. அந்தப் போஸ்டரைப் பார்த்ததும் ரசிகர்கள் கிண்டலடிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
ரகுலைப் பார்ப்பதற்கு ஸ்ரீதேவி போலவே இல்லை, ஸ்ரீரெட்டி போல இருக்கிறார் என சமூக வலைத்தளங்களில் கிண்டலடித்து வருகிறார்கள். இப்படி ஒரு நெகட்டிவ்வான விமர்சனத்தைப் படக்குழுவினர் நிச்சயம் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.